
இன்றைய பஞ்சாங்கம் (12.11.2026)
- தமிழ் தேதி: பராபவ வருடம், ஐப்பசி 26, வியாழக் கிழமை
- திதி: திருதியை 18.09 வரை, பின்பு சதுர்த்தி
- நட்சத்திரம்: கேட்டை 14.19 வரை, பின்பு மூலம்
- யோகம்: சுகர்மம் நாளை 04.26 வரை, பின்பு திருதி (பிரபலாரிஷ்ட யோகம்)
- கரணம்: கரம் 18.09 வரை, பின்பு வணிஜம்
- நல்ல நேரம்: காலை 10.45 - 11.45 / மாலை 12.15 - 1.15
- கௌரி நல்ல நேரம்: காலை — / மாலை 6.30 - 7.30
- இராகு காலம்: 1.30 - 3.00
- எமகண்டம்: 6.00 - 7.30
- குளிகை: 9.00 - 10.30
- சூலம்: தெற்கு (பரிகாரம்: தைலம்)
- சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி
- லக்னம்: துலாம் லக்னம் இருப்பு நா. 0 வி. 49
- சூரிய உதயம் / அஸ்தமனம்: 6.09 AM / 5.35 PM
சென்னை பஞ்சாங்கம் முழு விவரம் ›
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, எதிர்பாராத தடைகள் வரலாம்; பொறுமை அவசியம். உறவினர்களுடன் வாக்குவாதம் தவிர்க்கவும். திடீர் மருத்துவ செலவு வரலாம். உத்யோகத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். பண தேவைகள் பூர்த்தியாகும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். இன்று 02:19 PM முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய முடிவுகளை தள்ளி வைக்கவும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும்; கடன் சுமை குறையும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணத்தட்டுப்பாடு குறையும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். வியாபார விரிவாக்க முயற்சிகள் கைகூடும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, பிள்ளைகளின் விஷயத்தில் கவனம் தேவை. பெரியவர்களின் உடல்நலனில் அக்கறை காட்டவும். கடன் பிரச்சனை அவ்வப்போது வந்து போகும். உத்யோகத்தில் அமைதி நிலவும். கூட்டாளிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கவும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை; வாகனத்தில் மெதுவாக செல்லவும். குடும்பத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கலாம். தேவையின்றி கடன் வாங்காதீர்கள். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்கும் முன் யோசிக்கவும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க தாமதமாகும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, புத்தி கூர்மையால் எதையும் சாதிப்பீர். குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். பணவரவு நன்றாக இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, பேச்சில் நிதானம் தேவை; வீண் விவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. பண விவகாரங்களில் கவனம் செலுத்தவும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, மனதில் மகிழ்ச்சி பொங்கும்; நல்ல உணவும் ஓய்வும் கிடைக்கும். பெற்றோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, தூக்கமின்மை வரலாம்; வீண் செலவுகளை குறைக்கவும். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனைகள் தலைதூக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் தவிர்க்கவும். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்; எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கொடுத்த கடன் திரும்ப வரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, செய்யும் வேலையில் வெற்றியும் பாராட்டும் கிடைக்கும். உறவினர்கள் வழியில் நற்செய்தி கிடைக்கும். பொருள் சேர்க்கை உண்டாகும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரம் சிறப்படையும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும். தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும்.