Tamil Songs lyrics · 2017
Vaarai Vaarai lyrics from Bogan movie - போகன் திரைப்படத்திலிருந்து வாராய் நீ வாராய் பாடல் வரிகள்
வாராய் நீ வாராய் பாடல் 2017-ல் வெளியான போகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: டி. இமான் · பாடியவர்: சங்கர் மகாதேவன்
Vaarai Vaarai is a song from the 2017 Tamil film Bogan, written by Madhan Karky, composed by D. Imman and sung by Shankar Mahadevan.
- Movie Name
- Bogan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- போகன்
- Music
- D. Imman
- Year
- 2017
- Lyrics
- Madhan Karky
- Singers
- Shankar Mahadevan
Lyrics(Tamil)
வாராய் நீ வாராய்
நீ போகும் இடம் வெகு தூரமில்லை
நீ வாராய்
கூறாய் நீ கூறாய்
என் ரத்த இதழ் உன் முத்த கடல் என
கூறாய்
வாராய் வாராய் நீ வாராய்
நீ போகும் இடம் வெகு தூரமில்லை
நீ வாராய்
கூறாய் கூறாய் நீ கூறாய்
என் ரத்த இதழ் உன் முத்த கடல்
என கூறாய்
பஞ்சாக நீ நெஞ்செல்லாம் தீ
வேறென்ன கேள்வி பற்றி கொள்ள வா
ஜாமத்தில் வான் காமத்தில் நான்
ஐயங்கள் வீண் சுற்றி கொள்ள வா
சிரிப்போ உனது இதழோ எனது
உயிரோ உனது உடலோ எனது
உனது எனது
உனது எனது
உனது எனது
வாராய் ...
வாராய் நீ வாராய்
நீ போகும் இடம் வெகு தூரமில்லை
நீ வாராய்
தாராய் உனை தாராய்
நாம் காத்திருக்க இனி
நேரமில்லை நீ தாராய்
வாராய் வாராய் நீ வாராய்
நீ போகும் இடம் வெகு தூரமில்லை
நீ வாராய்
தாராய் தாராய் உனை தாராய்
நாம் காத்திருக்க இனி
நேரமில்லை நீ தாராய்
கள்ளாக நீ உள்ளுக்குள் தீ
ஏன் இன்னும் தாகம் ஊற்றிகொள்ளட்டா
பஞ்சத்தில் நான் மஞ்சத்தில் மான்
கொஞ்சல்கள் வீண் அள்ளி தின்னட்டா
உடையோ உனது இடையோ எனது
இதயம் உனது மார்போ எனது
உனது எனது உனது எனது ......
உன் நெற்றியில் தேனினை ஊற்றி
உன் பாதத்தில் பருகட்டுமா
உன் முதுகினில் தீயினை ஏற்றி
அதில் மெழுகென உருகட்டுமா
உன் கிளர்ச்சி குவியமறிந்து
அதில் கிளிகள் பறக்க விடவா
ஹே நீ உனை தீண்டா இடத்தில்
நான் நாவினில் தீண்டிடவே
நீ எந்தன் சொந்தம் இல்லை
மானே மானே
ஆனாலும் உந்தன் மேலே மோகம் தானே
அன்பே உன் முகம்
என் காதலனை காட்டும்
ஆனால் உன் நகம் என் காமுகனை காட்டும்
வளையல் உனது கரங்கள் எனது
அழகே
வளைவு உனது வரங்கள் எனது
மலரே
ஓ ....கிளைகள் எனது
கனிகள் உனது
வலி எனது பழி உனது
கிழி உயிரே
வாராய் வாராய் நீ வாராய்
நீ போகும் இடம் வெகு தூரமில்லை
நீ வாராய்
தூராய் தூராய் நீ தூராய்
உன் மோக மழை உன் உற்ற நிலை
நீ தூராய்
பஞ்சாக நீ நெஞ்செல்லாம் தீ
கெஞ்சல்கள் வேண்டாம் பற்றி கொள்ள வா
பஞ்சத்தில் நான் மஞ்சத்தில் மான்
கொஞ்சல்கள் வீண் அள்ளி தின்னட்டா
சிரிப்போ உனது இதழோ எனது
உயிரோ உனது உடலோ எனது
உனது எனது
உனது எனது
உனது எனது
Vaarai Vaarai song FAQ
Who sang Vaarai Vaarai?
Vaarai Vaarai was sung by Shankar Mahadevan for the 2017 Tamil film Bogan.
Who wrote the lyrics of Vaarai Vaarai?
The lyrics of Vaarai Vaarai were written by Madhan Karky.
Who composed the music for Vaarai Vaarai?
The music for Vaarai Vaarai was composed by D. Imman.
Which movie is the song Vaarai Vaarai from?
Vaarai Vaarai is from the Tamil film Bogan, released in 2017. The film has 7 songs on Tamilputhumai.
வாராய் நீ வாராய் பாடலை பாடியவர் யார்?
வாராய் நீ வாராய் பாடலை பாடியவர் சங்கர் மகாதேவன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.