Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Pudhiya Ulagai lyrics from Yennamo Yedho movie - என்னமோ ஏதோ திரைப்படத்திலிருந்து புதிய உலகை பாடல் வரிகள்

புதிய உலகை பாடல் 2014-ல் வெளியான என்னமோ ஏதோ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: டி. இமான் · பாடியவர்: வைக்கம் விஜயலட்சுமி

Pudhiya Ulagai is a song from the 2014 Tamil film Yennamo Yedho, written by Madhan Karky, composed by D. Imman and sung by Vaikom Vijayalakshmi.

WhatsApp
Movie Name (in Tamil)
என்னமோ ஏதோ
Music
D. Imman
Year
2014

Lyrics(Tamil)

புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு
பிரிவில் தொடங்கி பூத்ததை பிரிவில் முடிந்து போகிறேன்
மீண்டும் நான் மீள போகிறேன்
தூரமாய் வாழ போகிறேன்
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு

மார்பில் கீறினாய் ரணங்களை வரங்களாக்கினாய்
தோளில் ஏறினாய் எனை இன்னும் உயரமாக்கினாய்
உன் விழி போல மண்ணில் எங்கும் அழகி இல்லை என்றே
உன் விழி இங்கே கண்ணீர் சிந்த விலகி எங்கே சென்றேன்
மேலே நின்று உன்னை நாளும் காணும் ஆசையில்
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு

யாரும் தீண்டிடா இடங்களில் மனதை தீண்டினாய்
யாரும் பார்த்திடா சிரிப்பை என் இதழில் தீட்டினாய்
உன் மணம் போல விண்ணில் எங்கும் அமைதி இல்லை என்றேன்
உன் மணம் இன்று வேண்டாம் என்றே பறந்து எங்கோ சென்றேன்
வேறோர் உலகம் வேறோர் வாழ்க்கை என்னை ஏற்குமா
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
பிரிவில் தொடங்கி பூத்ததை பிரிவில் முடிந்து போகிறேன்
மீண்டும் நான் மீள போகிறேன்
தூரமாய் வாழ போகிறேன்
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு

Pudhiya Ulagai song FAQ

Who sang Pudhiya Ulagai?

Pudhiya Ulagai was sung by Vaikom Vijayalakshmi for the 2014 Tamil film Yennamo Yedho.

Who wrote the lyrics of Pudhiya Ulagai?

The lyrics of Pudhiya Ulagai were written by Madhan Karky.

Who composed the music for Pudhiya Ulagai?

The music for Pudhiya Ulagai was composed by D. Imman.

Which movie is the song Pudhiya Ulagai from?

Pudhiya Ulagai is from the Tamil film Yennamo Yedho, released in 2014. The film has 6 songs on Tamilputhumai.

புதிய உலகை பாடலை பாடியவர் யார்?

புதிய உலகை பாடலை பாடியவர் வைக்கம் விஜயலட்சுமி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

என்னமோ ஏதோ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்