Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Nee Sirichalum lyrics from Action movie - ஆக்ச‌ன் திரைப்படத்திலிருந்து ​நீ சிரிச்சாலும் பாடல் வரிகள்

​நீ சிரிச்சாலும் பாடல் 2019-ல் வெளியான ஆக்ச‌ன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: கிப்கொப் தமிழா · பாடியவர்: சிறினிசா செயசீலன்

Nee Sirichalum is a song from the 2019 Tamil film Action, written by Pa. Vijay, composed by Hiphop Tamizha and sung by Srinisha.

WhatsApp
Movie Name (in Tamil)
ஆக்ச‌ன்
Year
2019
Lyrics
Pa. Vijay
Singers
Srinisha

Lyrics(Tamil)

நீ சிரிச்சாலும்
என்ன மொறச்சாலும்
தினம் நினைச்சாலும்
சுட்டு எரிச்சாலும்

நெஞ்சில் இனிச்சாலும்
இல்ல வலிச்சாலும்
கையில் அணைச்சாலும்
மண்ணில் பொதைச்சாலும்

ஏதோ நீ செய்கிறாய் யுக்தி
நெஞ்சம் உன்னோடுதான் சுத்தி
இதமான காயங்கள்
உன் வார்த்தைகள் குத்தி

நானோ உன் பார்வையில் சிக்கி
சொல்ல முடியாமலே திக்கி
யாரோடும் பேசாமல்
சேர்ந்து போகிறோம் சொக்கி

நீ சிரிச்சாலும்
என்ன மொறச்சாலும்
தினம் நினைச்சாலும்
சுட்டு எரிச்சாலும்

தித்தோம் தன தித்தோம்
தன தித்தோம் தன தீம் தீம் தானா
தித்தோம் தன தித்தோம்
தன தித்தோம் தன தீம் தீம் தானா

தித்தோம் தன தித்தோம்
தன தித்தோம் தன தீம் தீம் தானா
தன தீம் தீம் தானா
தன தீம் தீம் தானா

புதைத்து வைத்த காதலை
பூக்களுக்குள் தேடவா
கூட வந்த ஆசையை
கூந்தலுக்குள் சூடவா

நெஞ்சிருக்கும் வரைக்குமே
உன் நினைவு இருக்குமே
காற்றிலா வெளியிலே
காத்துகிடக்கிறேன் நான்

நீ மௌனமாகவே
நடந்து போகிறாய்
காயம் செய்து கொண்டே
உன்னில் காதல் இல்லை என
தோழி போலவே
என்னை மாற்றி கொண்டேன்



இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன

இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன

தினம் உன்ன நினைச்சே
இரு கண்ண முழிச்சேன்
உன்ன ஒட்டி அணைச்சே
கனவுல கட்டி புடிச்சேன்

உன் கண்ணு முழியில்
என்ன கண்டு புடிச்சேன்
உன்ன மட்டும் நினைச்சேன்
தினம் செத்து பொழைச்சேன்

கை வீசும் காதலே
என்னை தாண்டியே எங்கு செல்கிறாயோ
இந்த பாலை வெயிலில்
பார்வை இன்றியே என்னை கொல்கிறாயோ

இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன

நீ சிரிச்சாலும்
என்ன மொறச்சாலும்
தினம் நினைச்சாலும்
சுட்டு எரிச்சாலும்

நெஞ்சில் இனிச்சாலும்
இல்ல வலிச்சாலும்
கையில் அணைச்சாலும்
மண்ணில் பொதைச்சாலும்

ஏதோ நீ செய்கிறாய் யுக்தி
நெஞ்சம் உன்னோடுதான் சுத்தி
இதமான காயங்கள்
உன் வார்த்தைகள் குத்தி

நானோ உன் பார்வையில் சிக்கி
சொல்ல முடியாமலே திக்கி
யாரோடும் பேசாமல்
சேர்ந்து போகிறோம் சொக்கி

தித்தோம் தன தித்தோம்
தன தித்தோம் தன தீம் தீம் தானா
தித்தோம் தன தித்தோம்
தன தித்தோம் தன தீம் தீம் தானா
தன தீம் தீம் தானா
தன தீம் தீம் தானா

Nee Sirichalum song FAQ

Who sang Nee Sirichalum?

Nee Sirichalum was sung by Srinisha for the 2019 Tamil film Action.

Who wrote the lyrics of Nee Sirichalum?

The lyrics of Nee Sirichalum were written by Pa. Vijay.

Who composed the music for Nee Sirichalum?

The music for Nee Sirichalum was composed by Hiphop Tamizha.

Which movie is the song Nee Sirichalum from?

Nee Sirichalum is from the Tamil film Action, released in 2019. The film has 4 songs on Tamilputhumai.

​நீ சிரிச்சாலும் பாடலை பாடியவர் யார்?

​நீ சிரிச்சாலும் பாடலை பாடியவர் சிறினிசா செயசீலன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆக்ச‌ன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்