பாடகி : ஏ. பி. கோமளா
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பெண் : மனித வாழ்விலே மகிமையானதே
மனித வாழ்விலே மகிமையானதே
மனித வாழ்விலே மகிமையானதே
மலரும் காதல் சுகமே
மனித வாழ்விலே …..
பெண் : கனியும் காதல் தனை கவரும் தூண்டில் பணமே
இனிமை யாவும் பெற இளமைக் காலம் நலமே
மனித வாழ்விலே …..
பெண் : செல்வம் போகும் வரும் செலவு கூடும் குறையும்
சுகம் அடைய பாக்கியம் வேணும்..
லாலாலா…லாலாலா…லாலாலா…
இளம் பருவம் மாறினால் பருவம் மாறினால்
நரையும் திரையும் உறுதி எனவே
இளமையில் பெறுக இன்பமே
பெறுக இன்பமே…..பெறுக இன்பமே…..
பெண் : மனித வாழ்விலே மகிமையானதே
மனித வாழ்விலே மகிமையானதே
மலரும் காதல் சுகமே….