பாடியவர்கள் : டி. ஏ. மோத்தி மற்றும் பி. லீலா
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
ஆண் : புது ரோஜாப் போலே
புவி மீதே வாழ்வோமே
தினம் புது ரோஜாப் போலே
புவி மீதே வாழ்வோமே
பெண் : போதும் போதும் ஆசை வார்த்தை
எல்லாம் பொய்தானே
போதும் போதும் ஆசை வார்த்தை
எல்லாம் பொய்தானே மகா சத்யவானே
ஆஹா மகா சத்யவானே…..
ஆண் : வாதாடாதே வா ஜாலம் செய்யும் கள்ளி
இள மானே கோபம் கொள்ளாதே
பெண் : புது ரோஜாப் போலே
புவி மீதே வாழ்வோமே…
ஆண் : தினம் புது ரோஜாப் போலே
புவி மீதே வாழ்வோமே
பெண் : ஆனந்தம் இதுவே சுகம்
ஆண் : இது மாதரின் தனி சாகசம்
பெண் : ஆனந்தம் இதுவே சுகம்
ஆண் : இது மாதரின் தனி சாகசம்
பெண் : இதே வம்புதானே
ஆண் : ஓஹோ வெறும் கேலிதானே…
பெண் : இதே வம்புதானே
ஆண் : ஓஹோ வெறும் கேலிதானே
பெண் : மனம் ஒன்று சேர்ந்தாலே போதும் நாமே
ஆண் : ஓஓஓ…காதல் கிளியே
பெண் : மனம் ஒன்று சேர்ந்தாலே போதும் நாமே
ஆண் : ஓஓஓ…காதல் கிளியே
பெண் : புது ரோஜாப் போலே
புவி மீதே வாழ்வோமே…
ஆண் : தினம் புது ரோஜாப் போலே
புவி மீதே வாழ்வோமே
ஆண் : மணி வண்டு போல் உன்னை பற்றி
மது உண்பதெந்நாளோ
ஆண் : மணி வண்டு போல் உன்னை பற்றி
மது உண்பதெந்நாளோ
பெண் : மணங் காணும் நாள் வந்தால் தினமும்
மனம் போல் மது உண்போமே
பெண் : தவறாதே…..
ஆண் : மறவாதே…
இருவர் : பிரியாதே….
இருவர் : புது ரோஜாப் போலே
புவி மீதே வாழ்வோமே…
தினம் புது ரோஜாப் போலே
புவி மீதே வாழ்வோமே……