September Madham
செப்டம்பர் மாதம்
ஆஷா போஸ்லே (Asha Bhosle, 8 செப்டம்பர் 1933 – 12 ஏப்ரல் 2026) இந்தியப் பின்னணிப் பாடகரும், தொழில்முனைவோரும், நடிகையும், தொலைக்காட்சி ஆளுமையுமாவார். பன்முகத்தன்மைக்குப் பெயர் பெற்ற இவர், இந்தித் திரைப்படத்துறையின் மிகச்சிறந்த, மிகவும் செல்வாக்குமிக்க பாடகர்களில் ஒருவராக ஊடகங்களில் விவரிக்கப்படுகிறார். எட்டுத் தலைமுறைக்கும் மேலாக தனது வாழ்க்கையில் பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்படங்களிலும் ஆவணப்படங்களிலும் பாடல்களைப் பதிவு செய்துள்ளார். மேலும் இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா, நான்கு பி. எஃப். ஜே. ஏ விருதுகள், பதினெட்டு மகாராட்டிர மாநில திரைப்பட விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார். கூடுதலாக கிராமி விருது பெற்ற இவர் 2000 இல், திரைப்படத் துறையில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகெப் பால்கே விருதால் கௌரவிக்கப்பட்டார். 2008-இல், நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த பத்ம விபூசண் விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது. 2011-இல் கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் போசுலேவை இசை வரலாற்றில் அதிகப் பாடல்களைப் பதிவு செய்யப்பட்ட கலைஞராக அங்கீகரித்தது.
போசுலே பின்னணிப் பாடகி இலதா மங்கேசுகரின் தங்கையும், மங்கேசுகர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் முக்கியமான நபருமாவார். இவரது சோப்ரானோ குரல் வரம்பிற்கு புகழ்பெற்றவர். இவரது பன்முகத்தன்மைக்குப் பெரும்பாலும் பாராட்டப்படுகிறார். போசுலேவின் படைப்புகளில் திரைப்பட இசை, பரப்பிசை, கஜல்கள், பஜனைகள், பாரம்பரிய இசை, நாட்டுப்புறப் பாடல்கள், கவ்வாலி, இரவீந்திர சங்கீதம் ஆகியவையாகும். இந்தியைத் தவிர, 20-இற்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் பாடியுள்ளார். 2013-இல், மாய் படத்தில் ஒரு நடிகையாக அறிமுகமாகி, இவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார். 2006-இல், போசுலே தனது வாழ்க்கையில் பன்னிரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார். இந்த எண்ணிக்கை பல ஆதாரங்களால் மீண்டும் மீண்டும் கூறப்பட்டது.
ஆசா மங்கேசுகர், மராத்தி, கொங்கணி மொழியைச் சேர்ந்த தீனநாத் மங்கேசுகரின் இசைக் குடும்பத்தில், சௌரில் உள்ள சிறிய குக்கிராமமான கோவரில், சௌராத்திலுள்ள சாங்கிலி (தற்போதைய மகாராட்டிராவில்) பிறந்தார். தீனநாத் ஒரு மராத்தி இசை மேடை நடிகரும் பாரம்பரியப் பாடகருமாவார். இவருடைய மனைவி செவந்தி குசராத்தைச் சேர்ந்தவர். ஆசாவுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, இவரின் தந்தை இறந்தார். இவரது குடும்பம் புனே கோலாப்பூருக்கும் பின்னர் மும்பைக்கும் குடிபெயர்ந்தது. இவரும் இவரது மூத்த சகோதரி இலதா மங்கேசுகரும் தங்கள் குடும்பத்தை ஆதரிப்பதற்காக திரைப்படங்களில் பாடவும் நடிக்கவும் தொடங்கினர். மராட்டியத் திரைப்படமான மஜா பால் (1943) படத்திற்காக தனது முதல் திரைப்படப் பாடலான 'சலா சலா நவ் பாலா' பாடலைப் பாடினார். படத்திற்கான இசையை தத்தா தாவ்சேகர் இசையமைத்தார். ஹன்ஸ்ராஜ் பெஹலின் சுனாரியா (1948) படத்திற்காக "சவான் ஆயா" பாடலைப் பாடியபோது இவர் இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். இவரது முதல் தனி இந்தித் திரைப்படப் பாடல் ராத் கி ரானி (1949) திரைப்படத்தில் அமைந்தது.
16 வயதில், இவர் 31 வயதான கண்பத்ராவ் போசுலேவை, தனது குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொண்டார்.
1960களின் முற்பகுதியில், கீதா தத், சம்சாத் பேகம், இலதா மங்கேசுகர் போன்ற பிரபல பின்னணிப் பாடகிகள், பெண் கதாநாயகிகளுக்கும், பெரிய படங்களில் பாடுவதிலும், ஆதிக்கம் செலுத்தினர். அவர்கள் மறுத்த பணிகளை ஆசா பெறுவார், வில்லி நடிகைகள், வாம்பயர்களுக்காக பாடுவார் அல்லது குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் பாடல்களைப் பாடுவார். 1950களில், இந்தித் திரைப்படங்களில் பெரும்பாலான பின்னணிப் பாடகர்களை விட இவர் அதிகப் பாடல்களைப் பாடினார். இவற்றில் பெரும்பாலானவை குறைந்த பொருட்செலவில் பி-அல்லது சி-பட்டியல் படங்களில் இருந்தன. இவரது ஆரம்பகால பாடல்களுக்கு அல்லா ரக்கா, சஜ்ஜத் உசேன், குலாம் முகமது ஆகியோர் இசையமைத்தனர். மேலும் இப்பாடல்களில் பெரும்பாலானவை சரியாக ஓடவில்லை. சஜ்ஜத் உசேன் இசையமைத்த சாங்டில் திரைப்படத்தில் (1952) பாடலைப் பாடிய இவர் நியாயமான அங்கீகாரத்தைப் பெற்றார். இதன் விளைவாக, திரைப்பட இயக்குநர் பிமல் ராய் இவருக்கு பரினிதா (1953) திரைப்படத்தில் பாட வாய்ப்பு வழங்கினார். பூட் போலிஷ் (1954) இல் முகமது ரபியுடன் "நான்ஹே முன்னே பச்சே" பாடலைப் பாடுவதற்கு இராஜ் கபூர் ஒப்புக்கொண்டதன் மூலம் பிரபலமானார்.
ஓ. பி. நாயர் 1956 இல் சி. ஐ. டி. திரைப்படத்தில் ஆசாவிற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். பி. ஆர். சோப்ரா 1957இன் நயா தௌர் என்ற திரைப்படத்தில் இவர் முதல் வெற்றி பெற்றார். சாகிர் இலுதியான்வி எழுதிய "மாங் கே சாத் தும்காரா", "சதி காத் பதானா", "உதன் சப் சப் சுல்பெய்ன் தேரி" போன்ற இரஃபியுடன் இவர் பாடிய காதல் பாடல்கள் இவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. ஒரு படத்தின் முன்னணி நடிகைக்காக இவர் அனைத்துப் பாடல்களையும் பாடியது இதுவே முதல் முறையாகும். சோப்ரா தனது பிற்காலத் தயாரிப்புகளில் கும்ரா (1963), வக்த் (1965), கம்ராசு (1967), ஆத்மி ஔர் இன்சான் (1966), துண்ட் (1973) உள்ளிட்ட பலவற்றிற்காக இவரை அணுகினார். போசுலேவுடன் நாயரின் இணைவு எதிர்கால வெற்றிக்கு வழிவகுத்தது. படிப்படியாக, இவர் தனது மதிப்பை நிலைநிறுத்தினார். மேலும் எஸ். டி. பர்மன், இரவி போன்ற இசையமைப்பாளர்களின் ஆதரவைப் பெற்றார். 1970 களில் போசுலேவும் நாயரும் ஒரு தொழில்முறையாகவும் தனிப்பட்ட வகையிலும் பிரிந்தனர். 1966 இல், இசையமைப்பாளர் ஆர். டி. பர்மனின் முதல் ஒலிப்பதிவுகளில் ஒன்றான தீசுரி மஞ்சில் திரைப்படத்திற்கான காதல் பாடல்கள் போசுலேவின் பாடும் திறனால் மக்கள் பாராட்டைப் பெற்றது. "ஆஜா ஆஜா" என்ற நடனப்பாடலை இவர் முதன்முதலில் கேட்டபோது, இந்த மேற்கத்திய இசையை தன்னால் பாட முடியாது என்று உணர்ந்ததாக கூறப்படுகிறது. பர்மன் இசையை மாற்ற முன்வந்தபோது, இவர் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, பத்து நாட்கள் ஒத்திகைக்குப் பிறகு பாடலைப் பாடி முடித்தார். மேலும் "ஆஜா ஆஜா", "ஓ கசீனா சுல்போன் வாலி", "ஓ மேரே சோனா ரே" போன்ற பிற பாடல்களில் (இரஃபி) உடனான மூன்று காதல் பாடல்களும் வெற்றிகரமாக அமைந்தன. படத்தின் முன்னணி நடிகரான சம்மி கபூர் ஒருமுறை, -"எனக்காக பாட முகமது இரஃபி இல்லாதிருந்தால், ஆசா போசுலேவை அப்பணியைச் செய்ய வைத்திருப்பேன்". என்று மேற்கோள் காட்டினார். பர்மனுடன் போசுலே இணைந்து பணியாற்றியது பல வெற்றிகளுக்கும் திருமணத்திற்கும் வழிவகுத்தது. 1960-70 களின் போது, கிந்த் திரைப்பட நடிகையும் நடனக் கலைஞருமான கெலனின் குரலாக இருந்தார். கெலனை வைத்து "ஓ கசீனா சுல்ஃபன் வாலி" பாடல் படமாக்கப்பட்டது. கெலன் பாடல்பதிவு அமர்வுகளில் கலந்து கொள்வார், இதனால் ஹெலன் பாடலை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப நடனத்தை திட்டமிட முடிந்தது என்று கூறப்படுகிறது. இவர்களின் பிற பிரபலமான பாடல்களில் "பியா து அப் தோ ஆஜா" (கேரவன்), "யே மேரா தில்" (டான்) போன்ற பாடல் அடங்கும்.
Asha Bhosle (née Mangeshkar; 8 September 1933 – 12 April 2026) was an Indian playback singer and actress who predominantly worked in Indian cinema. Known for her versatility, she was described in the media as one of the greatest and most influential singers in Hindi cinema. In a career spanning over eight decades, she recorded songs for films and albums in various Indian languages and won several accolades including two National Film Awards, four BFJA Awards, eighteen Maharashtra State Film Awards, nine Filmfare Awards including a Lifetime Achievement Award and a record seven Filmfare Awards for Best Female Playback Singer, in addition to two Grammy nominations. In 2000, she was honoured with the Dadasaheb Phalke Award, India's highest award in the field of cinema. In 2008, she was honoured by the Government of India with the Padma Vibhushan, the second-highest civilian honour of the country. The Guinness Book of World Records acknowledged her in 2011 as the most recorded artist in music history.
Bhosle was the younger sister of playback singer Lata Mangeshkar and belonged to the prominent Mangeshkar family. Renowned for her soprano voice range and often credited with her versatility, her work included film music, pop, ghazals, bhajans, traditional Indian classical music, folk songs, qawwalis, and Rabindra Sangeet. Apart from Hindi, she sang in over 20 Indian and foreign languages. In 2013, she made her debut as an actress in the film Mai, and received critical acclaim for her performance. In 2006, she stated that she had recorded over 12,000 songs in her career, a figure repeated by several other sources.
Asha Mangeshkar was born in the small hamlet of Goar in Sangli, then in the salute princely state of Sangli (now in Maharashtra), into the musical family of Pandit Deenanath Mangeshkar, who was Marathi and Konkani, and his Gujarati wife, Shevanti. Deenanath was an actor and classical singer on the Marathi musical stage. When Bhosle was nine years old, her father died. The family moved from Pune to Kolhapur and then to Mumbai. She and her elder sister Lata Mangeshkar began singing and acting in films to support their family. She sang her first film song, '"Chala Chala Nav Bala", for the Marathi film Majha Bal (1943). The music for the film was composed by Datta Davjekar. She made her Hindi film debut when she sang the song "Saawan Aaya" for Hansraj Behl's Chunariya (1948), though another film, Andhon Ki Duniya, was released before Chunariya in the same year; in both films she sang three songs each. Her first solo Hindi film song was for the movie Raat Ki Rani (1949). She made her Assamese film debut song when she sang the song "Pokhiraj Ghora" for the movie Sikimik Bijuli along with Kishore Kumar and Dr. Bhupen Hazarika in 1969.
Bhosle described herself as "an accident singer" who had learned by keenly listening to her father Deenanath Mangeshkar, his disciples, and her elder sister Lata Mangeshkar sing. She maintained daily riyaaz (practice) regardless of her age, stating that music was "equivalent to breathing" for her. Bhosle cited Elvis Presley and Bill Haley to have influenced her to embrace the western music style.
Her sisters, Lata and Usha Mangeshkar, have been playback singers. Her elder sister Meena Mangeshkar and younger brother Hridaynath Mangeshkar are music directors.
From the late 1940s to early 1950s, prominent playback singers like Geeta Dutt, Shamshad Begum and Lata Mangeshkar dominated singing for female leads and big films. In the 1950s, Bhosle sang more songs than most playback singers in Hindi films. Most of these were in low budget films. Her earliest songs included compositions by A. R. Qureshi, Sajjad Hussain, S. Mohinder, Sardar Malik and Ghulam Mohammed. Singing in Sangdil (1952), composed by Sajjad Hussain, she got reasonable recognition. In the same year, she had the lead in the film Chham Chhama Chham, under O. P. Nayyar, she sang 10 out of 11 songs in that film. Consequently, film director Bimal Roy gave her a chance to sing in Parineeta (1953). Raj Kapoor signed her to sing all songs in Boot Polish (1954), which gained her popularity.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
2005
♪ 7
சந்திரமுகி
2000
♪ 9
அலைபாயுதே
2000
♪ 6
ஹே ராம்
1997
♪ 8
இருவர்
1997
♪ 6
நேருக்கு நேர்
1992
♪ 7
மீரா
1991
♪ 9
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
1990
♪ 6
உலகம் பிறந்தது எனக்காக
1988
♪ 6
நான் சொன்னதே சட்டம்
1987
♪ 8
எங்க ஊரு பாட்டுக்காரன்