Skip to content

Popular

Tamil Songs lyrics · 1997

Engenge Engenge lyrics from Nerukku Ner movie - நேருக்கு நேர் திரைப்படத்திலிருந்து எங்கெங்கே எங்கெங்கே பாடல் வரிகள்

எங்கெங்கே எங்கெங்கே பாடல் 1997-ல் வெளியான நேருக்கு நேர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: ஆஷா போஸ்லே

Engenge Engenge is a song from the 1997 Tamil film Nerukku Ner, written by Vairamuthu, composed by Deva and sung by Asha Bhonsle.

WhatsApp
Music
Deva
Year
1997
Lyrics
Vairamuthu
Singers
Asha Bhonsle

Lyrics(Tamil)

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா


என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்
என் கால்களில் பொன் கொலுசுகள்
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்
பூப்போல இருந்த மனம் இன்று
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே
இதயம் துடிக்கும் உடலின் வெளியே

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே


என் வீதியில் உன் காலடி
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்
உன் ஆடையின் பொன்னூலிலே
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்
நான் உன்னை துரத்தியடிப்பதும்
நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா சரியா முறையா
காதல் பிறந்தால் இதுதான் கதியா

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

Engenge Engenge song FAQ

Who sang Engenge Engenge?

Engenge Engenge was sung by Asha Bhonsle for the 1997 Tamil film Nerukku Ner.

Who wrote the lyrics of Engenge Engenge?

The lyrics of Engenge Engenge were written by Vairamuthu.

Who composed the music for Engenge Engenge?

The music for Engenge Engenge was composed by Deva.

Which movie is the song Engenge Engenge from?

Engenge Engenge is from the Tamil film Nerukku Ner, released in 1997. The film has 6 songs on Tamilputhumai.

எங்கெங்கே எங்கெங்கே பாடலை பாடியவர் யார்?

எங்கெங்கே எங்கெங்கே பாடலை பாடியவர் ஆஷா போஸ்லே.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நேருக்கு நேர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்