Skip to content

Popular

Vedha

Artist profile

VedhaTamil Music Director – Song Lyrics & Movies

வேதா (இசையமைப்பாளர்)

About Vedha

எஸ். வேதா (Vedha) எஸ். எஸ். வேதாசலம் தமிழ்த் திரைப்படத்துறையின் ஓர் இசையமைப்பாளர். மர்ம வீரன் எனும் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தடம் பதித்த வேதா, ஆரவல்லி, பார்த்திபன் கனவு, கொஞ்சும் குமரி, சி.ஐ.டி.சங்கர் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் படிக்க ›

இவர் 1950 களின் முற்பகுதியில் சென்னையில் தயாரிக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் இவர் முக்கியமாகத் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றினார். 1952 முதல் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் தீவிரமாக இருந்தார்.

மாடர்ன் தியேட்டர்சு தயாரித்த பல படங்களுக்கு இவர் இசையமைத்தார். இந்தித் திரைப்படப் பாடல்களை தமிழ்ப் பாடல்களாக மாற்றியமைப்பதில் இவர் பிரபலமாக அறியப்பட்டார்.

திரைப்படங்களில் இசை இயக்குநர்களுக்கு உதவுவதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1955 இல் வெளிவந்த மேனகா திரைப்படத்தில் டி. ஜி. லிங்கப்பா, சி. என். பாண்டுரங்கன் ஆகியோருடன் இணைந்து இசையமைப்பாளராக இருந்தார்.

1956இல் வெளிவந்த மர்ம வீரன் என்ற திரைப்படம் தான் இவர் இசையமைப்பாளராகப் பணியாற்றிய முதற் திரைப்படம். இப்படத்தில் ஆர். பாலசரஸ்வதி தேவி பாடிய 'துடிக்கும் வாலிபமே என்ற பாடல் பெரும் வெற்றியைப் பெற்றது. வழக்கமாக ஆர். பாலசரஸ்வதி தாலாட்டுப் பாடல்களைப் பாடுவதில் பெயர் பெற்றவர், ஆனால் இப்பாடல் சிருங்காரம் என்று அழைக்கப்படும் காதல் நிறைந்த பாடலாகும்.

1958 இல் மணமாலை திரைப்படத்தில் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா பாடிய நடக்காது ஜம்பம் பலிகாடு என்ற பாடல் நீண்ட காலமாக இலங்கை வானொலியில் பிரபலமான பாடலாக இருந்தது.

அதே ஆண்டில் மற்றொரு படத்திற்கு இசையமைத்தார். "அன்பு எங்கே" ஒரு வெற்றிகரமான படம், இசை ஒரு காரணியாக இருந்தது. குறிப்பாக, டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ஆகியோரால் தனித்தனியாக இரண்டு பதிப்புகளில் பாடப்பட்ட டிங்கிரி டிங்கலே பாடல் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்பாடல் பைலா வகையைச் சேர்ந்தது.

1965 இல் வெளிவந்த வல்லவனுக்கு வல்லவன் திரைப்படத்தின் "ஓராயிரம் பார்வையிலே" என்ற பாடலும் மிகவும் பிரபலமான பாடலாக இருந்தது. இந்தியில் இருந்து இப்பாடல் எடுக்கப்பட்டாலும், கண்ணதாசனின் பாடல் வரிகளும், டி. எம். சௌந்தரராஜனின் மயக்கும் குரலும் இதற்கு தமிழ்ச் சுவையளித்தது.

1966 இல் வெளிவந்த வல்லவன் ஒருவன் திரைப்படத்தின் ஒரு பாடல், "பளிங்கினால் ஒரு மாளிகை" எல். ஆர். ஈசுவரி பாடும் திறமைக்கு பொருத்தமான பாடலாக இருந்தது. அவரது குரலும் வேதாவின் இசையும் இணைந்து பார்வையாளர்களை பெரும் உயரத்திற்கு கொண்டு சென்றன.

இவரது இசையமைப்பிற்காகப் பாடிய பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன், ஏ. எம். இராஜா, திருச்சி லோகநாதன், கே. ஜே. யேசுதாஸ், டி. ஏ. மோதி, எஸ். சி. கிருஷ்ணன், ஜே. பி. சந்திரபாபு, சீர்காழி கோவிந்தராஜன், வி. என். சுந்தரம், ஏ. எல். ராகவன், எஸ். வி. பொன்னுசாமி, கண்டசாலா, மொகிதீன் பேக், எடி ஜெயமன்னே, பி. சுசீலா, எல். ஆர். ஈசுவரி, ஆர். பாலசரஸ்வதி தேவி, கே. ஜமுனா ராணி, (ராதா ஜெயலட்சுமி, பி. லீலா, ஜிக்கி, கே. ராணி, ஏ. ஜி. இரத்னமாலா, பி. வசந்தா, எம். எஸ். இராஜேஸ்வரி, மாபெல்லி பத்மேதமி, ருக்மணி தேவி, மனோரமா தேவி ஆகியோராவர்.

இசையமைப்பாளர் வேதாவிற்கு கண்ணதாசன், சுந்தர் கண்ணன், ஏ. எல். நாராயணன், தஞ்சை என். இராமையா தாஸ், வில்லிபுத்தன், ஏ மருதகாசி, வாலி, கருணைதாசன், நல்லதம்பி, ஆலங்குடி சோமு, பஞ்சு அருணாசலம் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

Vedha (S. S. Vedhachalam) was an Indian composer who started working in Sinhala films during the early 1950s when they were being produced in Madras. He later worked mainly in Tamil films. He was active in the field for about 25 years from 1952 onwards.

Read full biography ›

He composed music for many films produced by Modern Theatres. He was popularly known to adapt Hindi tunes to Tamil songs.

He started his career by assisting music directors in films. He was a co-music director in the 1955 film Menaka along with T. G. Lingappa and C. N. Pandurangan.

The first film he was in-charge of as music director is Marma Veeran released in 1956. The song Thudikkum Vaalibame sung by R. Balasaraswathi Devi in this film was a big hit. Usually R. Balasaraswathi was known for singing lullaby songs but this song is full of romantic love known as Sringaram.

Nadakkaadhu Jambam Palikkadhu a song sung by T. M. Soundararajan and Jamunarani in the 1958 film Manamalai was a popular number in Radio Ceylon for a long time.

He composed music for another film in the same year. Anbu Enge was a successful film, music being one of the factors. Particularly, the number Dingiri Dingale sung by T. M. Soundararajan and P. Susheela separately as two versions, was a mega hit. The tune is of Baila genre.

The song "Oraayiram Paarvaiyile" from the 1965 film Vallavanukku Vallavan was also a very popular number. Though the tune was lifted from Hindi, the lyrics by Kannadasan and the mesmerising voice of T. M. Soundararajan gave it a Tamil flavour.

A song from the 1966 film Vallavan Oruvan, "Palinginaal Oru Maaligai" was an apt number for L. R. Eswari's singing talent. Her voice combined with Vedha's music took audience to great heights.

The singers who sang for his composition are: T. M. Soundararajan, A. M. Rajah, Thiruchi Loganathan, K. J. Yesudas, T. A. Mothi, S. C. Krishnan, J. P. Chandrababu, Sirkazhi Govindarajan, V. N. Sundaram, A. L. Raghavan, S. V. Ponnusamy, Ghantasala, Mohideen Baig, Eddie Jayamanne, P. Susheela, L. R. Eswari, R. Balasaraswathi Devi, K. Jamuna Rani, (Radha) Jayalakshmi, P. Leela, Jikki, K. Rani, A. G. Rathnamala, B. Vasantha, M. S. Rajeswari, Mabel Blythe, Rukmani Devi and Manorama.

Lyricists who wrote lyrics for Vedha's compositions include Kannadasan, Sundar Kannan, A. L. Narayanan, Thanjai N. Ramaiah Dass, Villiputhan, A. Maruthakasi, Vaali, Karunaidasan, Nallathambi, Alangudi Somu and Panju Arunachalam.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Vedha · Music Composer songs · 76 · page 1 / 5

Vedha Movies List · திரைப்படங்கள் · 27

  1. Ganesapuram 2020 ♪ 3

    Ganesapuram

    கணேசபுரம்

  2. Ullam 2012

    Ullam

    உள்ளம்

  3. 2001

    Natchatra Kadhal

  4. Justice Viswanathan 1971 ♪ 6

    Justice Viswanathan

    ஜஸ்டிஸ் விஸ்வநாதன்

  5. CID Shankar 1970 ♪ 5

    CID Shankar

    சி. ஐ. டி. சங்கர்

  6. Naangu Killadigal 1969 ♪ 4

    Naangu Killadigal

    நான்கு கில்லாடிகள்

  7. Ponnu Mappillai 1969

    Ponnu Mappillai

    பொண்ணு மாப்பிள்ளை

  8. Athey Kangal 1967

    Athey Kangal

    அதே கண்கள்

  9. Ethirigal Jakkirathai 1967 ♪ 6

    Ethirigal Jakkirathai

    எதிரிகள் ஜாக்கிரதை

  10. Kadhalithal Podhuma 1967 ♪ 6

    Kadhalithal Podhuma

    காதலித்தால் போதுமா

  11. Iru Vallavargal 1966

    Iru Vallavargal

    இரு வல்லவர்கள்

  12. Vallavan Oruvan 1966 ♪ 5

    Vallavan Oruvan

    வல்லவன் ஒருவன்

  13. Yaar Nee? 1966 ♪ 7

    Yaar Nee?

    யார் நீ

  14. Oru Viral 1965 ♪ 3

    Oru Viral

    ஒரு விரல்

  15. Sarasa B.A. 1965 ♪ 5

    Sarasa B.A.

  16. Vallavanukku Vallavan 1965

    Vallavanukku Vallavan

    வல்லவனுக்கு வல்லவன்

  17. 1964 ♪ 8

    Amma Enge

    அம்மா எங்கே

  18. Chitrangi 1964 ♪ 8

    Chitrangi

    சித்ராங்கி

  19. Pasamum Nesamum 1964 ♪ 7

    Pasamum Nesamum

    பாசமும் நேசமும்

  20. Veeranganai 1964 ♪ 7

    Veeranganai

  21. Konjum Kumari 1963 ♪ 8

    Konjum Kumari

    கொஞ்சும் குமரி

  22. Parthiban Kanavu (1960 film) 1960 ♪ 7

    Parthiban Kanavu (1960 film)

    Parthiban கனவு (1960 film)

  23. Minnal Veeran 1959

    Minnal Veeran

    மின்னல் வீரன்

  24. Anbu Engey 1958 ♪ 8

    Anbu Engey

    அன்பு எங்கே

  25. Manamalai 1958

    Manamalai

  26. Marma Veeran 1956

    Marma Veeran

    மர்ம வீரன்

  27. Menaka 1955

    Menaka

    மேனகா

Worked with Vedha