Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 1994

Vennilavin Theril Yeri lyrics from Duet movie - டூயட் திரைப்படத்திலிருந்து வெண்ணிலாவின் தேரில் ஏறி பாடல் வரிகள்

வெண்ணிலாவின் தேரில் ஏறி பாடல் 1994-ல் வெளியான டூயட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ்

Vennilavin Theril Yeri is a song from the 1994 Tamil film Duet, sung by K. J. Yesudas.

WhatsApp
Movie Name (in Tamil)
டூயட்
Year
1994

Lyrics(Tamil)

வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானம் உள்ள ஊமைப்போல
தானம் கேட்க கூசி நின்றேனே
நிறங்கண்டு முகம் கண்டால்
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிழல் கண்டேன்
நான் பாசம் கொண்டேன்

வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே

***

அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே (இசை)

அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே

நிறங்கண்டு முகங்கண்டால்
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிழல் கண்டேன்
நான் பாசம் கொண்டேன் (இசை)

ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே

(இசை) சரணம் - 2

கால் அழகு மேல் அழகு
கண் கொண்டு கண்டேன்
அவள் நூல் அவிழும் இடையழகை
நோகாமல் தின்றேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சை
காயம் செய்து மாயம் செய்தாளே (இசை)

அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே
அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு
சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில்
செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டு போகும்
கொண்ட காதல் கொள்கை மாறாது (இசை)

அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே

Vennilavin Theril Yeri song FAQ

Who sang Vennilavin Theril Yeri?

Vennilavin Theril Yeri was sung by K. J. Yesudas for the 1994 Tamil film Duet.

Which movie is the song Vennilavin Theril Yeri from?

Vennilavin Theril Yeri is from the Tamil film Duet, released in 1994. The film has 12 songs on Tamilputhumai.

வெண்ணிலாவின் தேரில் ஏறி பாடலை பாடியவர் யார்?

வெண்ணிலாவின் தேரில் ஏறி பாடலை பாடியவர் கே. ஜே. யேசுதாஸ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டூயட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்