Tamil Songs lyrics · 1994
En Kathaleh lyrics from Duet movie - டூயட் திரைப்படத்திலிருந்து காதலே என் காதலே பாடல் வரிகள்
காதலே என் காதலே பாடல் 1994-ல் வெளியான டூயட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
En Kathaleh is a song from the 1994 Tamil film Duet, written by Vairamuthu and sung by S. P. Balasubramaniam.
- Movie Name
- Duet 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- டூயட்
- Year
- 1994
- Lyrics
- Vairamuthu
- Singers
- S. P. Balasubramaniam
Lyrics(Tamil)
வேர்ட்ஸ் கான்ட் ஜஸ்ட் எக்ஸ்பிரஸ்
லவ் இஸ் கேம்பல்
வித் டியர்ஸ் ஆஃப் பெயின்
இன் லைஃப்ஸ் டிஸ்ட்ரஸ்
லவ் மேக் யோர் லைஃப் எ ஸ்ட்ரயின்
வேர் மனி ஸ்டாண்ட்ஸ்
டூ லூஸ் தி கேம்
லவ் ஹேஸ் திஸ் கிரேஸி நேம்
வேர் பெயின் அண்ட் ஸாரோ
டை டவுன் இன் ஷேம்...
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய் ( இசை )
கிள்ளுவதைக கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
***
காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால்
எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா... இல்லை வீழ்வதா..
உயிர் வாழ்வதா... இல்லை போவதா..
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா ( இசை )
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
***
காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
இது மாற்றமா... தடுமாற்றமா..
என் நெஞ்சிலே... பனி மூட்டமா..
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதைக கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
En Kathaleh song FAQ
Who sang En Kathaleh?
En Kathaleh was sung by S. P. Balasubramaniam for the 1994 Tamil film Duet.
Who wrote the lyrics of En Kathaleh?
The lyrics of En Kathaleh were written by Vairamuthu.
Which movie is the song En Kathaleh from?
En Kathaleh is from the Tamil film Duet, released in 1994. The film has 12 songs on Tamilputhumai.
காதலே என் காதலே பாடலை பாடியவர் யார்?
காதலே என் காதலே பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
காதல் & வாழ்த்து · Love & wishes
டூயட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Vennilavin Theril Yeri
வெண்ணிலாவின் தேரில் ஏறி
Mettu Podu
தங்கமே தமிழுக்கில்லை
Kulicha Kuthaalam
குளிச்சா குத்தாலம்
Anjali Anjali
அஞ்சலி அஞ்சலி
Kathirikka Kathirikka
கத்திரிக்கா கத்திரிக்கா
En Kadhale En Kadhale Female
En Kadhale En Kadhale Male
Kavithaikku Porul
Love is Torture
Naan Paadum Sandham
Sithathinaal Konda