வாழ்வதற்கென்றே பிறந்தோம் நாம் – இன்று
வகையறியாது இருக்கின்றோம்
ஆள்வதற்கென்றே பிறந்தவர் நாம் என்றறிந்தும்
அடிமை ஆகிடலாமா
அறிந்திருந்தும் அடிமை ஆகிடலாமா...(வாழ்வதற்)
உள்ளத் தெளிவும் நெஞ்சில் உறுதியும் வேண்டும்
கள்ளமில்லா சொல் வன்மையும் வேண்டும்
உள்ளத் தெளிவும் நெஞ்சில் உறுதியும் வேண்டும்
கள்ளமில்லா சொல் வன்மையும் வேண்டும்
நல்லது கேட்டது என்றறிந்திட வேண்டும்
நல்லது கேட்டது என்றறிந்திட வேண்டும்
நாடு நலம் பெறவே பணி செய்ய வேண்டும்
நாடு நலம் பெறவே பணி செய்ய வேண்டும்
வாழ்வதற்கென்றே பிறந்தோம் நாம் – இன்று
வகையறியாது இருக்கின்றோம்
ஆள்வதற்கென்றே பிறந்தவர் நாம் என்றறிந்தும்
அடிமை ஆகிடலாமா