அறியாமல் பெருகுது இன்பந்தான் – என்னை
அறியாமல் பெருகுது இன்பந்தான்....
வசந்தமும் தென்றலும் இசைந்தது போலே என்னை
அறியாமல் பெருகுது இன்பந்தான்.....(அறியாமல்)
அழகு முகத்தில் குளிர்ந்த நிலவைக் கண்டேனே
பழகும் விதத்தில் பாகின் சுவையைக் கண்டேனே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே..(என்னை)
கற்பனையில் கண்ட அற்புதமும் நீயே
கருத்திலென்றும் நிலைத்து நிற்கும்
காதல் தெய்வம் நீயே
மலர் கணைகள் தூவும் மன்மதனைப் போலே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே..(என்னை)