நன்றாக வாழ வேண்டும் நாம்
நன்றாக வாழ வேண்டும் தமிழ்
நாடு செழிக்க வேண்டும் நாம்
நன்றாக வாழ வேண்டும்....
ஒன்றாக வாழ வேண்டும் நம்மில்
ஒற்றுமை ஓங்க வேண்டும் என்ற
சான்றோர் சொல் கேட்டாலே
ஏற்றம் உண்டாகும் என்றும்.....
பூசலும் பொறாமை போருமில்லாத
புதிய தமிழ்நாடு வேண்டும் இனி
நேசமும் அன்பும் நிறைந்த அறிவாளர்
நிதமும் பெருகிட வேண்டும்
தனக்கே வாழும் சிறுமதியின்றி
பிறர்க்கு உதவும் நல்ல குணமும்
பெருக வேண்டும்
நன்றாக வாழ வேண்டும் நாம்
நன்றாக வாழ வேண்டும்...
மனிதப் பண்புதான் இன்னதென்றறியும்
மனிதன் தமிழகத்தோனே என்று
மாநிலமெல்லாம் நம் புகழ் ஓங்கும்
மார்க்கம் வளர வேண்டும்
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்று உணர வேண்டும் என்றும் நாம்
நன்றாக வாழ வேண்டும் நாம்
நன்றாக வாழ வேண்டும்