பேசும் காவியம் நீரே என் பேரின்பம் நீர்தானே
பேசும் காவியம் நீரே என் பேரின்பம் நீர்தானே
நம் பிரேமையே வெற்றிதானே
சம்மதிப்பார் என்றும் சந்தோஷமே – நம்
மனம் போல் வாழும் நாளினித்தானே
சம்மதிப்பார் என்றும் சந்தோஷமே....
கலைசேர் மணியே எனதாருயிரே
புதிதாம் உலகில் புகுவோம் நாமே
கலைசேர் மணியே எனதாருயிரே
புதிதாம் உலகில் புகுவோம் நாமே
கனிரசம் போலாமே கனிரசம் போலாமே...
காதல் வானிலே நாமிருபேரும்
கானம் பாடுவோம் வானம்பாடி போல்
கதிரால் மலரும் செழுந்தாமரையே
இனி நாம் உடலும் உயிராயினமே (கதிரால்)
கனவு நினைவாமே கனவு நினைவாமே
சம்மதிப்பார் என்றும் சந்தோஷமே – நம்
மனம் போல் வாழும் நாளினித்தானே
சம்மதிப்பார் என்றும் சந்தோஷமே....