வரவேணும் துரையே நீங்கள்
வரவேணும் துரையே எங்கள்
வளர்மதி அங்கயற்கண்ணி மகிழ
வரவேணும் துரையே நீங்கள்...
கனவே நினைவாய் கனிந்தது இந்நாளே
வனமலர் தனிலே நறுமணம் பெறவே
அருமை பெருமையோடு நீங்கள்
வரவேணும் துரையே
பருவகால மழை வருவது போலே (வரவேணும்)
வழிமேல் விழி வைத்து வருந்தினேன் ஸ்வாமி
எழில் வரவால் உள்ளம் குளிர்ந்தேன் ஸ்வாமி
ஏழையின் இல்லம் சிறந்திட அன்பின்
ஜோதியாக என்றும் நீங்கள்.....(வரவேணும்)
செங்கதிரைக் காணும் பங்கஜத்தைப் போலே
பொங்கும் இன்பம் கண்டேன் மங்கை என் வாழ்விலே
திருமுக தரிசனம் விரும்பிடும் என்னை
மறந்திடாமல் என்றும் நீங்கள்....(வரவேணும்)