மண் மீதிலே இளம் பெண் மாணிக்கம் இந்த
மண் மீதிலே இளம் பெண் மாணிக்கம் வீணே
மரணம் எய்திடலாமா வீணே
மரணம் எய்திடலாமா........
நாடாளும் வெறிகொண்ட ஆட்சியர்
செய்திடும் நலமில்லா செய்கையாலே
கோடானு கோடி மக்கள் மடிகின்றார்
கொடுமையிது நியாயமாமோ......
மண் மீதிலே அரும் பெண்மாமணி –இந்த
மண் மீதிலே அரும் பெண்மாமணி வீணே
மரணம் எய்திடலாமா வீணே
மரணம் எய்திடலாமா..........
அன்போடு பண்பும் அழிந்ததே உலகில்
துன்பமே இருளாய் சூழ்ந்ததே இன்று
மண் மீதிலே இரு பெண் பேதைகள் – இந்த
மண் மீதிலே இரு பெண் பேதைகள் வீணே
மரணம் எய்திடலாமா வீணே
மரணம் எய்திடலாமா.....
எய்திடலாமா.....எய்திடலாமா.....எய்திடலாமா.....