பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : பால பாரதி
ஆண் : வாசல் இது வாசல் தலைவாசல்
வாழ்க்கை சொல்லும் வாசல் முதல்வாசல்
இரவுக்கு விடியல் தலைவாசல்
எங்களுக்கு உலகே தலைவாசல்
ஆண் : வாசல் இது வாசல் தலைவாசல்..
ஆண் : வாழ்க்கை என்பதே பள்ளிக்கூடம்தான்
வாழும் அனுபவம் வாழ்க்கை பாடம்தான்
நேற்று வரப்போவதில்லை
நாளை நம் கையில் இல்லை
இன்று நமதென்று கொண்டால்
இல்லை மனதோடு தொல்லை
கார்த்திகை போனாலே மழையே பெய்யாது
வாலிபம் போனாலே வாழ்க்கை செல்லாது
துள்ளி ஏழு…
ஆண் : வாசல் இது வாசல் தலைவாசல்
ஆண் : இளமை என்பது வானவில்லடா
இளமை தீரும் முன் எழுந்து நில்லடா
மேகம் விலை கேட்பதில்லை
காற்று கடன் கேட்பதில்லை
பூமி உனக்கான ரோஜா
புகுந்து விளையாடு ராஜா
பாதை என்றாலும் முள்ளும் அங்குண்டு
முள்ளே நின்றாலும் பாதை ஒன்றுண்டு
கண்டுபிடி….
ஆண் : வாசல் இது வாசல் தலைவாசல்
வாழ்க்கை சொல்லும் வாசல் முதல்வாசல்
இரவுக்கு விடியல் தலைவாசல்
எங்களுக்கு உலகே தலைவாசல்
ஆண் : வாசல் இது வாசல் தலைவாசல்..