பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : பால பாரதி
பெண் : ஆஆஆஆ……ஆஆஆஆ…..ஆஆஆஆ.
பெண் : அதிகாலை காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே
பெண் : அதிகாலை காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
பெண் : இளமையின் அலைகளில்
பருவமும் மிதந்தது
இமைகளின் அசைவினில்
உலகமும் பணிந்தது
ஓ .. காலை மேகம் சோலை ஆகும்
வானம் எங்கள் சாலை ஆகும்
தாமரை கொடை விரிக்கும்
பெண் : அதிகாலை காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு….
பெண் : மலரினம் சிரித்திட
திசைகளும் எழுந்தது
பொழுதுகள் விடிந்திட
தவங்களும் புரிந்தது
ஓ .. வானவில்லின் வண்ணம் யாவும்
பாதம் வந்தே கோலம் போடும்
காவியம் தலை வணங்கும்
பெண் : அதிகாலை காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே…..