பாடகர் : என். எஸ். கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன்
ஆண் : உன்னருளால் இந்த உடல் வளரும்
உந்தியப்பா என் தொந்தியப்பா
உன்னருளால் இந்த உடல் வளரும்
உந்தியப்பா என் தொந்தியப்பா
உன்னருளால் இந்த உடல் வளரும்
ஆண் : பணமும் காசும் பருத்தவன் தெய்வம்
பணமும் காசும் பருத்தவன் தெய்வம்
பருப்பும் சோறும் பசித்தவன் தெய்வம்
பருப்பும் சோறும் பசித்தவன் தெய்வம்
உன்னருளால் இந்த உடல் வளரும்
உந்தியப்பா என் தொந்தியப்பா
ஆண் : தேவைக்குமேலே சேர்ப்பவன் திருடன்
தேவைக்குமேலே சேர்ப்பவன் திருடன்
தெய்வம் விதியென்று காய்பவன் குருடன்
தெய்வம் விதியென்று காய்பவன் குருடன்
உன்னருளால் இந்த உடல் வளரும்
உந்தியப்பா என் தொந்தியப்பா