பாடகர் : பு. உ. சின்னப்பா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன்
ஆண் : ஆஹா அதிசய மிதாமே
உலகமறியாத அதிசய மிதாமே
உலகமறியாத அதிசய மிதாமே
ஆண் : இறைவன் அற்புத லீலையின் பெருமை
எவ்விதம் புகழ்வேன்
இறைவன் அற்புத லீலையின் பெருமை
எவ்விதம் புகழ்வேன்
ஆண் : அரசன் ஆண்டி ஆவனே
ஆண்டி மணிமுடி பூண்பனே
அரசன் ஆண்டி ஆவனே
ஆண்டி மணிமுடி பூண்பனே
அவன் செயல் அரை நொடி தனிலே
அலை கடல் சுவருமே
அவன் செயல் அரை நொடி தனிலே
அலை கடல் சுவருமே
ஆண் : இறைவன் அற்புத லீலையின் பெருமை
எவ்விதம் புகழ்வேன்
ஆண் : கனவிலும் நினையாத
இன்பமது கைகூடும்
பரிதிமுன் பனி போலும்
இன்னல்கள் பறந்தோடும்
கனவிலும் நினையாத
இன்பமது கைகூடும்
பரிதிமுன் பனி போலும்
இன்னல்கள் பறந்தோடும்
ஆண் : இனியொரு துணை ஏதென
ஏங்கி மனம் வாடும்
இனியொரு துணை ஏதென
ஏங்கி மனம் வாடும் பொழுது
இரங்கி அஞ்சேல் என்றருள்
சுரந்து வந்தாள் நஞ்சணி
ஆண் : இறைவன் அற்புத லீலையின் பெருமை
எவ்விதம் புகழ்வேன்