பாடகர்கள் : பி. யு. சின்னப்பா மற்றும் கண்ணாம்பா
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
ஆண் : உனக்கேன் வீண் கவலை
உலகமெல்லாம் பாண்டுரங்கன் குழந்தைகள்
உனக்கேன் வீண் கவலை
பெண் : கவலை இல்லாதவர்க்கு பெண்டாட்டி பிள்ளை ஏன்
கவலை இல்லாதவர்க்கு பெண்டாட்டி பிள்ளை ஏன்
காஷாயம் அணியலாமே…..
பெண்டாட்டி பிள்ளை ஏன் காஷாயம் அணியலாமே
ஆண் : காஷாய வேஷத்தை கண்டால் மயங்குவனோ
காஷாய வேஷத்தை கண்டால் மயங்குவனோ
விட்டலன் என்றெண்ணமோ பேதாய்
காஷாய வேஷத்தை கண்டால் மயங்குவனோ
விட்டலன் என்றெண்ணமோ பேதாய்..
பெண் : உங்கள் கபட வேதாந்தத்தை கேட்டால்
உங்கள் கபட வேதாந்தத்தை கேட்டால்
உலகம் கைக் கொட்டி சிரிக்காதோ
உலகம் கைக் கொட்டி சிரிக்காதோ
ஆண் : உலகு சிரித்தாலும் உண்மைக்கு அழிவுண்டோ
உலகு சிரித்தாலும் உண்மைக்கு அழிவுண்டோ
உயர் தெய்வம் எந்தன் விட்டோபா
உயர் தெய்வம் எந்தன் விட்டோபா
பெண் : அவர் உங்கள் பசித் தீர்ப்பார்
பானை சட்டி சமைப்பார்
அவர் உங்கள் பசித் தீர்ப்பார்
பானை சட்டி சமைப்பார்
அசையாமல் அமர்ந்திருங்கள்
நீங்கள் அசையாமல் அமர்ந்திருங்கள்