பாடகி : பி. ஏ. பெரிய நாயகி
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பெண் : சந்தைக் கூட்டமடா…ஆஆஆஆஆஆ….
உலகமே சந்தைக் கூட்டமடா இதில்
உலவிடும் மனிதரிலே நல்லோர் பொல்லார்
இரு வகையாம் குணமுடையோர்
வருவார் போவார் அது போலே
பெண் : பாரில் சந்தைக்கூட்டம்
பல வகை மனித நடமாட்டம்
பாரில் சந்தைக்கூட்டம்
பல வகை மனித நடமாட்டம்
பெண் : ஏர் பிடித்து தினம் பாடுபட்டு உடல்
இளைக்கிறான் ஒருவன்
அவன் வேர்வை சிந்தி விளையும்
சுகத்திலே திளைக்கிறான் ஒருவன்
பெண் : ஏர் பிடித்து தினம் பாடுபட்டு உடல்
இளைக்கிறான் ஒருவன்
அவன் வேர்வை சிந்தி விளையும்
சுகத்திலே திளைக்கிறான் ஒருவன்
பாரில் இதோ சந்தைக்கூட்டம்
பல வகை மனித நடமாட்டம்
பெண் : கை முதல் இல்லாததாலே
கடன் வாங்கினான் வட்டி மேலே
கை முதல் இல்லாததாலே
கடன் வாங்கினான் வட்டி மேலே
பெண் : நம்பியே உடன் பொங்கும் வெய்யிலிலே
செய்கிறான் வியாபாரம்
நம்பியே உடன் பொங்கும் வெய்யிலிலே
செய்கிறான் வியாபாரம்
என்ன செய்தும் இல்லையே சாரம்
பெண் : வாங்கிய கடனை தந்தது போக
வட்டிக்கே சரியாச்சு
வாங்கிய கடனை தந்தது போக
வட்டிக்கே சரியாச்சு
லாபம் வட்டிக்கே சரியாச்சு
பாடுபட்டதெல்லாம் வீணாச்சு
பெண் : வட்டி வங்கி கொள்ளையடிப்பவன்
வாழ்வு உயரலாச்சு
வட்டி வங்கி கொள்ளையடிப்பவன்
வாழ்வு உயரலாச்சு
பெண் : வாழ நினைக்கிறான் ஒருவன் அவனை
வாட்டி வதைக்கிறான் ஒருவன்
வாழ நினைக்கிறான் ஒருவன் அவனை
வாட்டி வதைக்கிறான் ஒருவன்
பாரில் இதோ சந்தைக்கூட்டம்
பல வகை மனித நடமாட்டம்…..