Tamil Songs lyrics · 2015
Theerane lyrics from Baahubali movie - பாகுபலி திரைப்படத்திலிருந்து தீரனே பாடல் வரிகள்
தீரனே பாடல் 2015-ல் வெளியான பாகுபலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: கீரவாணி · பாடியவர்: Ramya Behara
Theerane is a song from the 2015 Tamil film Baahubali, written by Madhan Karky, composed by M. M. Keeravani and sung by Ramya Behara.
- Movie Name
- Baahubali 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பாகுபலி
- Music
- M. M. Keeravani
- Year
- 2015
- Lyrics
- Madhan Karky
- Singers
- Ramya Behara
Lyrics(Tamil)
ஹோ நான் செந்தேனா?
ஹோனன ஹோனன ஹோனன
ஹோ நீ வண்டுதானா?
அந்தரத்தில் ஒரு
வெண்மதியாய் உன்னை அழைத்தேனா?
இந்திரலோகத்துச்
சுந்தரி உனக்கே உனக்காய் முளைத்தேனா?
வீரனே! உலகம் உந்தன் கீழே
தீரனே! நீ நினைத்தாலே!
மயக்கமா? அசதியா?
என் மடியேறு நான் பாடுவேன்
உனை வழி நடத்தியே
துணையாக நான் மாறுவேன்
தடைகளை தகர்த்திந்த
மலைகளை நகர்த்திடப் பார்க்கின்றேன்
உனைக் காண...
விழும் இந்த அருவியை
சடையனின் சடையென நான் இங்கே எதிர்க்கின்றேன்
உன் பூமுகம் அதைக் காணவே
இப்பூமி ரெண்டாக நான் பிளப்பேனே!
வீரனே! உலகம் உந்தன் கீழே
தீரனே! நீ நினைத்தாலே!
உயரமாய் முளைத்து வா
நீ வரும் அந்த வரம் கேட்கிறேன்!
சிகரங்கள் துளைத்து வா
வழி மீது விழி வைக்கிறேன்!
முயலும் உந்தன் மனதின் முன்னே
புயலும் வந்து கைகள் கட்டும்
இயலும் என இதயம் கர்ஜிக்கும்
அதை எட்டுத் திக்கும்!
மலைகள் உந்தன் தோளைக் கண்டு தான்
பொறாமை கொள்ளுதே!
அருவி உந்தன் வேகத்தை
விழி விரித்துப் பார்க்கின்றதே!
இமைத்திடா உன்
விழிகளில் தீ
கடந்து போ நீ
மலைகள் தாவி
வீரனே
ஊரனே
உலகம் உந்தன் கீழே
எனது தேகம் இங்கே!
தீரனே
மாறனே
நீ நினைத்தாலே!
உன் விரல் எங்கே?
Theerane song FAQ
Who sang Theerane?
Theerane was sung by Ramya Behara for the 2015 Tamil film Baahubali.
Who wrote the lyrics of Theerane?
The lyrics of Theerane were written by Madhan Karky.
Who composed the music for Theerane?
The music for Theerane was composed by M. M. Keeravani.
Which movie is the song Theerane from?
Theerane is from the Tamil film Baahubali, released in 2015. The film has 7 songs on Tamilputhumai.
தீரனே பாடலை பாடியவர் யார்?
தீரனே பாடலை பாடியவர் Ramya Behara.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.