Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Pachai Thee lyrics from Baahubali movie - பாகுபலி திரைப்படத்திலிருந்து பச்சைத் தீ நீயடா பாடல் வரிகள்

பச்சைத் தீ நீயடா பாடல் 2015-ல் வெளியான பாகுபலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: கீரவாணி · பாடியவர்: கார்த்திக்

Pachai Thee is a song from the 2015 Tamil film Baahubali, written by Madhan Karky, composed by M. M. Keeravani and sung by Karthik.

WhatsApp
Movie Name (in Tamil)
பாகுபலி
Year
2015
Singers
Karthik

Lyrics(Tamil)

பச்சைத் தீ நீயடா!
இச்சைப் பூ நானடா!
ஒற்றைப் பார்வை கொண்டே
பற்றிக் கொண்டாயடா!

வெற்றுக் கல் நானடா!
வெட்டும் உளி நீயடா!
அற்பப் பாறை என்னில்
சிற்பம் செய்தாயடா

நீயே மண் மின்னும் வெண்தாரகை
உள்ளங்கை சேர்ந்தப் பூங்காரிகை
கைகள் நாம் கோர்க்கச் சிறகாகுமே!
புது வானங்கள் உருவாகுமே!

மான் விழிக்குள் எந்தன்
வாழ்வொன்றைக் காண
மாமலை ஒன்றேறி வந்தேனடி!

இதயம் ஒன்று உள்ளதென்று
உன் அணைப்பாலே கண்டேனே!
இன்னும் எனை இறுக்கியே
அணைத்திடத் துடித்தேனே!

நீயே மண் மின்னும் வெண்தாரகை
தோளில் வீழ்கின்ற பூங்காரிகை
உந்தன் தோளோடு தோள் சேர்க்கிறேன்
என்னில் தோகைகள் நான் பார்க்கிறேன்!


கீறலில் உண்டாகும்
கீதங்கள் கேட்டாய்
மோதலின் மோகங்கள் கேட்டாயடி!

பிறவி பல எடுத்தாலும்
நிகழும் கணம் நான் மறவேனே
வலிகளை வரமென தந்திடக் கேட்டேனே!

நீயே மண் மின்னும் வெண்தாரகை
கண்ணில் தேன் சிந்தும் பூங்காரிகை
உந்தன் நெஞ்சுக்குள் நான் நீந்தினேன்
காதல் ஆழத்தை நான் காண்கிறேன்!

Pachai Thee song FAQ

Who sang Pachai Thee?

Pachai Thee was sung by Karthik for the 2015 Tamil film Baahubali.

Who wrote the lyrics of Pachai Thee?

The lyrics of Pachai Thee were written by Madhan Karky.

Who composed the music for Pachai Thee?

The music for Pachai Thee was composed by M. M. Keeravani.

Which movie is the song Pachai Thee from?

Pachai Thee is from the Tamil film Baahubali, released in 2015. The film has 7 songs on Tamilputhumai.

பச்சைத் தீ நீயடா பாடலை பாடியவர் யார்?

பச்சைத் தீ நீயடா பாடலை பாடியவர் கார்த்திக்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பாகுபலி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்