Skip to content

Popular

Tamil Songs lyrics · 2009

Siragugal lyrics from Sarvam movie - சர்வம் திரைப்படத்திலிருந்து சிறகுகள் வந்தது எங்கோ செல்ல பாடல் வரிகள்

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல பாடல் 2009-ல் வெளியான சர்வம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · பாடியவர்: ஜாவத் அலி

Siragugal is a song from the 2009 Tamil film Sarvam, written by Pa. Vijay and sung by Javed Ali.

WhatsApp
Movie Name (in Tamil)
சர்வம்
Year
2009
Lyrics
Pa. Vijay
Singers
Javed Ali

Lyrics(Tamil)

சிறகுகள் வந்தது
எங்கோ செல்ல இரவுகள்
தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை
காணவே

கனவுகள் பொங்குது
எதிலே அள்ள வலிகளும்
சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னை
தேடியே

உன்னை உன்னை
தாண்டி செல்ல கொஞ்ச
காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட
என்னால் ஆகுமோ

உன்னை உன்னை
தேடி தானே இந்த ஏக்கம்
இந்த பாதை இந்த பயணம்
இந்த வாழ்க்கை ஆனதோ

கனவுகள் பொங்குது
எதிலே அள்ள வலிகளும்
சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது
உன்னை தேடியே

ஆஆ ஆஆ ஆஆ
ஆஆஹா ஆஆஹா
ஆஆஹா ஆஆஹா

ஓ நதியே நீ எங்கே
என்று கரைகள் தேட கூடாதா
நிலவே நீ எங்கே என்று
முகில்கள் தேட கூடாதா

ஓ மழை இரவினில்
குயிலின் கீதம் துடிப்பதை
யார் அறிவார் கடல் மடியினில்
கிடக்கும் பலரின் கனவுகள்
யார் அறிவார்

அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே நீ அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அன்பே எந்தன்
நெஞ்சம் எங்கே பூவின்
உள்ளே நிலவின் மேலே
தீயின் கீழே காற்றின்
வெளியே இல்லையே

உந்தன் கண்ணில்
உந்தன் மூச்சில் உந்தன்
இரவில் உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில் உந்தன்
உயிரில் உள்ளதே

சிறகுகள் வந்தது
எங்கோ செல்ல இரவுகள்
தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை
காணவே

ஒரு இமை எங்கிலும்
தேனில் மூழ்க ஒரு இமை
மாத்திரம் வலியில் நோக
இடையினில் எப்படி கனவும்
காணுமோ

உன்னை உன்னை
தாண்டி செல்ல கொஞ்ச
காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட
என்னால் ஆகுமோ

உன்னை உன்னை
தேடி தானே இந்த ஏக்கம்
இந்த பாதை இந்த பயணம்
இந்த வாழ்க்கை ஆனதோ

Siragugal song FAQ

Who sang Siragugal?

Siragugal was sung by Javed Ali for the 2009 Tamil film Sarvam.

Who wrote the lyrics of Siragugal?

The lyrics of Siragugal were written by Pa. Vijay.

Which movie is the song Siragugal from?

Siragugal is from the Tamil film Sarvam, released in 2009. The film has 5 songs on Tamilputhumai.

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல பாடலை பாடியவர் யார்?

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல பாடலை பாடியவர் ஜாவத் அலி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சர்வம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்