சிந்தனை ஏன் செல்வமே – வீண்
சிந்தனை ஏன் செல்வமே – மனம்
நொந்து உன் கண்ணில் நீர் கலங்கிட
சிந்தனை ஏன் செல்வமே வீண் (சிந்தனை)
இன்ப துன்பம் இரண்டும் உலகிலே
மாறி மாறி வருமே வீணிலே....
சிந்தனை ஏன் செல்வமே வீண்
சிந்தனை ஏன் செல்வமே....
சோதனை எதுவரினும் நீ சிறிதும்
சோர்வினை அடையாதே
ஆதவன் முன் இருள் போல் துயரெல்லாம்
நீங்கிடும் நீ அறிவாய்
வேணும் பொறுமை மிகவே
மனதிலே வீணில் வருந்துவதோ
வாழ்வினில் உன் கடமை உணராமல்
வாடுதல் தான் அழகோ...வனிதையே...
வாழ்வினில் உன் கடமை உணராமல்
வாடுதல் தான் அழகோ...வனிதையே...
வீணிலே....சிந்தனை ஏன் செல்வமே
வீண் சிந்தனை ஏன் செல்வமே....