குலவும் யாழிசையே கண்ணன்
குழலிசை ஆவாயோ – ஊதும்
குழலிசை போலே உள்ளம்
கொள்ளை கொள்வையோ......மதி (குலவும்)
கலையின் சுவையெல்லாம்.....தரும்
கண்ணன் குழலிசையே – என்
அலையும் மனதிலே இன்ப
அருவியாகுமே........மதி (குலவும்)
கல்லும் கரையும் கனிவான வேணுகானாமிர்தம்
உள்ளம் உருகும் உடலும் சிலிர்க்கும்
தெள்ளிய வானமிர்தம்
பாலகோபாலனின் வேணுகானாமிர்தம்
வானுலாவும் காற்றிலே ஞான இன்ப ஊற்றிலே
தேன் கலந்த பாலுடன் தான் கலந்த நாதமே
மனோஹரம் மேவும் சுகம் யாவும் தரும் மாயவன்
மோகனராகம் கேட்டால் மோகம் மீறுமே எவர்க்கும்
மோகனராகம் கேட்டால் மோகம் மீறுமே....மதி (குலவும்)