மனதில் புதுவித இன்பம் காணுதே
மாறிடாத நலம் பெருகுதே
எனதுயிர் நாந்தான் அன்பை எண்ணியே
எந்தன் சிந்தை மிக மகிழுதே (மனதில்)
பெண்களில் நானே பாக்யசாலிதான்
பெருமையாகவே வாழ்ந்திடுவேன்
இதயங்குளிர ஒரு இனிமை பெருகும் சுகம்
என்னவென்று சொல்வேன்
தாயே தயாநிதியே உன்
தாள் இணைதான் கதியே – ஒரு
தாழ்விலாது மென்மேலும் என்றும்
நல் இன்பம் தந்தருள் நீயே..
மனோரதம் போலே
மணவாளன் வாய்த்ததினாலே
புவி மீதினில் நான் சுகம் பெற
என்ன புண்யம் செய்தேன்
புது யுகம் கண்டேன் – சுவை
பொங்கிட ஆசையும் கொண்டேன்
இனிதாக அன்பு நிறைந்த ஆனந்தமே..
மனதில் புதுவித இன்பம் காணுதே