எளியோர் செய்யும் இழிவான தொழிலை
எஜமான் மகள் நீ செய்யலாமா – இதை
எவரேனும் பார்த்திடில் நகைப்பாரே
கண்டு நகைப்பாரே இதை
எல்லோர்க்கும் சொல்லி உன்னைப் பழிப்பாரே (எளியோர்)
எளியோரும் மனிதர்கள் தானல்லவோ
எவரையும் தாழ்வாக எண்ணாதே
எவர் மகளானாலும் என்னடி – வீட்டில்
ஏதேனும் வேலைகள் செய்ய வேணும்.
பெருமையைத்தானே ஆதரிப்பார் – இந்த
சிறுமையைக் கண்டுன்னை யார் மதிப்பார்
மிக பெருமையினால் தன்னை மதிப்பவரை
ஒரு பெரிதாக நான் எண்ணிப் பாரேனே.
எல்லாம் தெரியும் நானிதை
ஒருபோதும் நம்பிடேனே
ஏனடி வீரம் தீரம் பேசுகிறாய் வீணே
இறைவன் ஒருவன் அவனே
எல்லாம் தெரிந்த மேதை
ஏனிந்த பேதம் மடமை ஆகாதே
நீயொரு போதும் பெருமை பேசாதே.(எளியோர்)