Skip to content

Popular

Tamil Songs lyrics · 2006

Poovanathil Maram lyrics from Thambi movie - தம்பி திரைப்படத்திலிருந்து பூவனத்தில் மரமுண்டு பாடல் வரிகள்

பூவனத்தில் மரமுண்டு பாடல் 2006-ல் வெளியான தம்பி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: வித்தியாசாகர் · பாடியவர்: பி. ஜெயச்சந்திரன்

Poovanathil Maram is a song from the 2006 Tamil film Thambi, written by Na. Muthukumar, composed by Vidyasagar and sung by P. Jayachandran.

WhatsApp
Movie Name (in Tamil)
தம்பி
Year
2006

Lyrics(Tamil)

பெண் : பூவனத்தில் மரமுண்டு
மரம் நிறைய பூவுண்டு
பூ நிறைய தேனுண்டு
பூப்பறிக்கப் போவோமா
பூ மகனே கண்ணே வா

பெண் : பூவனத்தில் மரமுண்டு
மரம் நிறைய பூவுண்டு
பூ நிறைய தேனுண்டு
பூப்பறிக்கப் போவோமா
பூ மகளே பெண்ணே வா

ஆண் : அன்னை மடித்தாலாட்டிலே
திண்ணைக்கதை நாம் கேட்டதும்
தந்தை மேலே ஏறிக்கொண்டு
அம்பாரிகள் நாம் போனதும்

ஆண் : வெண்டைக்காயின்
காம்பைக் கிள்ளி
தங்கக்கம்மல் என்று சொல்லி
தங்கைக் காதில் மாட்டிவிட்டு
ரசித்ததுவும்

ஆண் : மொட்டைமாடி வெண்ணிலவில்
வட்டமாக நாம் அமர்ந்து
கூட்டாஞ்சோறு கையில் வாங்கி
ருசித்ததுவும்
எங்கள் வீடுபோல
இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா ..

ஆண் : காற்றில் மரம் ஆடக்கண்டு
வீட்டில் சென்று ஒளிந்தோமன்று
பேய்கள் எல்லாம் பொய்கள் என்று
தந்தை சொல்ல பயமேதின்று

ஆண் : பள்ளிவிட்டுப் பசியுடன்
துள்ளித்துள்ளி வீடுவந்து
ஒன்றுமில்லை என்றவுடன்
சண்டை போட்டதும்
காய்ச்சல் வந்து படுக்கையில்
சொந்தம் எல்லாம் துடிக்கையில்
அடிக்கடி காய்ச்சல் வரவேண்டிக்கொண்டதும்
எங்கள் வீடு போல
இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா ..

ஆண் : பூவனத்தில் மரமுண்டு
மரம் நிறைய பூவுண்டு
பூ நிறைய தேனுண்டு
பூப்பறிக்கப் போவோமா
பூ மகளே கண்ணே வா

Poovanathil Maram song FAQ

Who sang Poovanathil Maram?

Poovanathil Maram was sung by P. Jayachandran for the 2006 Tamil film Thambi.

Who wrote the lyrics of Poovanathil Maram?

The lyrics of Poovanathil Maram were written by Na. Muthukumar.

Who composed the music for Poovanathil Maram?

The music for Poovanathil Maram was composed by Vidyasagar.

Which movie is the song Poovanathil Maram from?

Poovanathil Maram is from the Tamil film Thambi, released in 2006. The film has 6 songs on Tamilputhumai.

பூவனத்தில் மரமுண்டு பாடலை பாடியவர் யார்?

பூவனத்தில் மரமுண்டு பாடலை பாடியவர் பி. ஜெயச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தம்பி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்