பெரும் பணத்திலே பிறந்து பணத்திலே வளர்ந்த
பகட்டுக்காரன் போல் பழகத் தெரிய வேணும்
இங்லீஷ் படிச்ச மேதை போல் பேப்பர் கையிலே
பவுண்டன் பையிலே ஸ்டெயிலே காட்ட வேணும்
சில பெரிய மனுஷன் போல வாயிலே சுருட்டு இருக்கணும்
பேட்டி காண யாரும் வந்தால் சீட்டு வர வேணும்
கண்டாலே மயங்கணும் கையாலே வணங்கணும்
கண்ணாலே பேசி காட்ட வேணும்
சட்டம் பட்டம் பெற்றவர் போலே பேசணும்
பாரிஸ்டர் மினிஸ்டர் ஜாடையாக மணிபர்சை காட்டணும்
சகலரும் மயங்கிட வெளிச்சம் போடணும்
தயங்கிடாதே மயங்கிடாதே தவறிடாதே
ஆமாம் இது ரகசியம் ரகசியம் ஐயா இது ரகசியம் (பெரும்)
நல்ல சம்மர் ஸீஸனில் ஊட்டி கொடைக்கானல் பங்களா
இந்த ஐயாவுக்கு இருக்குன்னு சொல்லணும்
காரு மேலே ஊரைச்சுத்தி டூரு வரவேணும்
டிப்டாப்பா நடக்கணும் டீசண்டா இருக்கணும்
தன்னாலே நடிச்சுக் காட்டவேணும்
ஹாட்டும் சூட்டும் அப்டுடேட்டா இருக்கணும்
காலிலே பூட்டு டக்டக்டக்
கையிலே ஸ்டிக்கு டொக் டொக் டொக்
ஆளைப் பார்த்ததும் அசந்து போகணும்
அடிக்கடி பார்ட்டியில் கலந்து கொள்ளணும்
விருந்தில் கூட மருந்து போல அருந்த வேணும்...
ஆமாம் இது ரகசியம் ரகசியம் ஐயா இது ரகசியம் (பெரும்)