அதிர்ஷ்டம் அது இஷ்டமாக
வருவதுதானுங்க அதிர்ஷ்டம்
பதட்டப் பட்டால் முடியுமா
பெட்டைக் கோழி கூவினால் விடியுமா
பாரில் யாவரும் தன்னை மீறியே
பணத்தாசையால் அலைந்தாலும் அது
இஷ்டமாக வருவதானுங்க அதிர்ஷ்டம் (அதிர்ஷ்டம்)
கனவு பலித்திட காத்திருந்தேன்
அந்நாளிலே என் மனம் போல் – அந்த
கவலை தீர்ந்ததே வாழ்விலே
கலை ஆர்வமாகவே அடுத்து முயன்றாலும்
ஆகும் நாளன்றி ஆகாது உலகில் அது
இஷ்டமாக வருவதானுங்க அதிர்ஷ்டம் (அதிர்ஷ்டம்)
ராணி போலவே வாழ்வேன் – இசை
வாணி என்ற புகழ் அடைவேன்
கலைவானில் மேவிடும் வானம்பாடி போல்
கானம் பாடிடும் எனது வாழ்விலே அது
இஷ்டமாக வருவதானுங்க அதிர்ஷ்டம் (அதிர்ஷ்டம்)