கற்பனைக் கனவிலே நானொரு
கதாநாயகியைக் கண்டேன் ஒரு
கதாநாயகியைக் கண்டேன்....(கற்பனை)
அந்தக் கதாநாயகி யாரோ
காதல் பாட்டு பாடினாளோ
ஹிந்தி ட்யூனில் பாடினாளோ
இங்லீஷ் டான்ஸ்ஸூ ஆடினாளோ..
சுவை தரும் தமிழில் பாடி
சினிமா ஸ்டார் போல் ஆடி
சிரிப்பு காட்டியே ஆசை மூட்டிய
இன்டர் நேஷனல் ப்யூட்டி
கறுப்பு திராட்சை போல் கண்கள்
கன்னம் இரண்டுமே ஆப்பிள்
காந்தம் போலவே கவரும் பேச்சு
கிடைத்ததே எனக்குச் சான்ஸ்ஸூ..(கற்பனை)
புள்ளி மானைப் போல் துள்ளி
பார்வையால் கதை சொல்லி
ஜாலியாய் அவள் ஜாடை பேசவே
சரசம் ஆடி வந்தீரோ
அழகு புன்னகை கண்டு
அவளிடம் ஆவல் கொண்டு
அன்னமே அஜந்தா வண்ணமே – எனவே
அடுக்கு மொழியில் அளந்தீரோ
கற்பனைக் கனவினிலே வந்த
கதாநாயகி யாரோ.....
பறக்கும் தட்டிலே வந்தாள்
பார்க்கில் என்னையே கண்டாள்
பாவை என்னுடன் கேலி பேசியே
எதிரில் வந்து நிற்கின்றாள்.
விஷயம் புரிந்து கொண்டேன்
வாழ்வினில் இன்பம் கண்டேன்
கனவிலும் நினைவிலும் இணை பிரியாத
காதல் ஜோடி நாம் தானே........(கற்பனை)