அம்மம்மா ஆகாது ஆவேசம் கூடாது
ஆபத்து தானுங்க அவசரம் ஏனுங்க – நாம்
காதல் கொண்டால் என்ன கண்ணே என்றாலென்ன
கல்யாணம் ஆகுமுன் கண்ட்ரோலும் வேணுங்க (அம்மம்மா)
என்னாசை மோகினி இனிக்கும் மாங்கனி
எண்ணாமல் பேசாதே மானே நீ
கண்ணாலே வாட்டுறே காதல் மூட்டுறே –இன்பக்
கனவாலே என் மனம் அலைமோதுதே தினம்
கனிவாகக் கேக்கிறேன் கண்ட்ரோலு என்கிறே
என் மேலே எதுக்கு வீண் ஆசை கொள்ளுறே
உன்னாலே காத்திட முடியுமா
இப்போ இளக்காரமாக இருந்தாலும் பின்னே
பணக்காரன் ஆகுவேன் தெரியுமா
வெறுங்கையாலே முழம் போடாதே எனை நாடாதே
வீ சொல்லாலே உன் ஜம்பம் சாயுமா
வக்கீலை போலவே வாது செய்கிறே
வார்த்தைக்கெல்லாம் ப்ரேக்குப் போடுறே....(அம்மம்மா)