Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Mazhai Vara Pogudhae lyrics from Yennai Arindhaal movie - என்னை அறிந்தால் திரைப்படத்திலிருந்து மழை வர போகுதே பாடல் வரிகள்

மழை வர போகுதே பாடல் 2015-ல் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: கார்த்திக்

Mazhai Vara Pogudhae is a song from the 2015 Tamil film Yennai Arindhaal, written by Thamarai, composed by Harris Jayaraj and sung by Karthik.

WhatsApp
Year
2015
Lyrics
Thamarai
Singers
Karthik

Lyrics(Tamil)

மழை வர போகுதே துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்
ஓஹோ முகில் போல மென் பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவர் சொல்லி கேட்பேன்
ஓ கடல் போன்ற கண்ணாலே
என்னை வாரி சென்றாலே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று
அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்

மழை வர போகுதே துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்

Let me pop my collar like above the killer
Let me follow me like a hard vannila
Lyrically gangster once upon a time
Take it easy show di now a policeman
Lady with a love with a lover
Show me the love cause I won that
Dont you ever wanna stop me that lunch
Because I think I am loving so much

கரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள்
வலித்தாலும் ஏதோ சுகம்
ஏதோ சுகம்
குழி விழும் கன்னத்தில் குடி இரு என்கிறாள்
விலையில்லா ஆயுள் வரம்
ஓஹோ நிலா தூங்கும் மேகத்தில் கனா காணும் நேரத்தில்
அவள் தானே வந்தாள் அணைக்காமல் சென்றாள்
ஓ இமை ரெண்டும் மூடாது உறக்கங்கள் வாராது
அதை காதல் என்றால் அவள் தானே தந்தாள்
நடந்தாலும் முன்னே கடந்தாலும் பின்னே
மனம் எங்கும் அவள் ஞாபகம்

கண்ணை கட்டி விட்டால் கூட பட்டாம்பூச்சி பூவை தேடும்
மழை என்றால் மண்ணை தானே வந்து சேரும்

கண்ணை கட்டி விட்டால் கூட பட்டாம்பூச்சி பூவை தேடும்
மழை என்றால் மண்ணை தானே வந்து சேரும்
ஹே எந்த பக்கம் நிற்கின்றாயோ அந்த பக்கம் கண்கள் போகும்
முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சல் ஆகும்
சுழலும் மயில் நீ ஓஹோ ஹோ
உன் தோகை என் தோழில்
சுகமாய் புரளும் ஓஹோ ஹோ
பார்ப்பேன் என் வாழ் நாளில்

மழை வர போகுதே துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்
ஓஹோ முகில் போல மென் பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவர் சொல்லி கேட்பேன்
ஓ கடல் போன்ற கண்ணாலே
என்னை வாரி சென்றாலே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று
அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்

Mazhai Vara Pogudhae song FAQ

Who sang Mazhai Vara Pogudhae?

Mazhai Vara Pogudhae was sung by Karthik for the 2015 Tamil film Yennai Arindhaal.

Who wrote the lyrics of Mazhai Vara Pogudhae?

The lyrics of Mazhai Vara Pogudhae were written by Thamarai.

Who composed the music for Mazhai Vara Pogudhae?

The music for Mazhai Vara Pogudhae was composed by Harris Jayaraj.

Which movie is the song Mazhai Vara Pogudhae from?

Mazhai Vara Pogudhae is from the Tamil film Yennai Arindhaal, released in 2015. The film has 7 songs on Tamilputhumai.

மழை வர போகுதே பாடலை பாடியவர் யார்?

மழை வர போகுதே பாடலை பாடியவர் கார்த்திக்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

என்னை அறிந்தால் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்