Tamil Songs lyrics · 1964
Koduthellam Koduthaan lyrics from Padagotti movie - படகோட்டி திரைப்படத்திலிருந்து கொடுத்ததெல்லாம் பாடல் வரிகள்
கொடுத்ததெல்லாம் பாடல் 1964-ல் வெளியான படகோட்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்
Koduthellam Koduthaan is a song from the 1964 Tamil film Padagotti, written by Vaali and sung by T. M. Soundararajan.
- Movie Name
- Padagotti 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- படகோட்டி
- Year
- 1964
- Lyrics
- Vaali
- Singers
- T. M. Soundararajan
Lyrics(Tamil)
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
Koduthellam Koduthaan song FAQ
Who sang Koduthellam Koduthaan?
Koduthellam Koduthaan was sung by T. M. Soundararajan for the 1964 Tamil film Padagotti.
Who wrote the lyrics of Koduthellam Koduthaan?
The lyrics of Koduthellam Koduthaan were written by Vaali.
Which movie is the song Koduthellam Koduthaan from?
Koduthellam Koduthaan is from the Tamil film Padagotti, released in 1964. The film has 8 songs on Tamilputhumai.
கொடுத்ததெல்லாம் பாடலை பாடியவர் யார்?
கொடுத்ததெல்லாம் பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.