ஈனா மீனா டீகா ஜெய் ஜாம நீகா
மாக நாக நாகா சீகா பீகா ரீகா
ஈனா மீனா ரீகா டீகா ஜெய் ஜெய் ஜாம நீகா
மாக நாகா மாக நாகா சீகா பீகா ரோலா ரீகா
சொன்னாலே சந்தோசம்.....
அன்னநடை நடந்து வரும் தங்கம்
அதிசயப் பெண் இதுபோல இல்லை எங்கும்
சொன்ன சொல்லைத் தட்டாது
சோறு தண்ணி கேக்காது
கண்ணாடி முன் நிக்காது
கடைத் தெருவைச் சுத்தாது.....ஓஹோ..ஹோ..(ஈனா)
புடவை நகை பொருளும் கேக்க மாட்டாள்
புருஷனையும் சண்டைக்கிழுக்க மாட்டாள்
ஆத்திரமே கொண்டு நாத்தியை திட்டமாட்டா
அப்பாவி மாமியாரை ஆட்டியே வைக்க மாட்டாள்
ஆஹா...ஹா...ஏஹே..ஹே..ஓஹோ..ஹோ..ஹோ..(ஈனா)
கணவனையே தன் தெய்வமெனும் மங்கை
கற்பு நகை அணிவாள் இந்த நங்கை
கற்பனையுமில்லே சொப்பனமும் இல்லே
இப்படியோர் பெண்ணை எங்கும் கண்டதில்லை
ஆனாலும் ஒண்ணும் இல்லை
ஆனாலும் ஒண்ணும் இல்லை – என்ன
பேச்சிலே மூச்சிலே உயிரே இல்லை ஹே.....
ஈனா மீனா டீகா ஜெய் ஜாம நீகா....