எப்போ வருவாரோ அவர் எப்போ வருவாரோ
எந்தன் மன மோகனன் எந்தன் மன மோகனன்
செப்பியபடியே தரிசனம் தர எப்போ வருவாரோ.....
காதலி என் மனம் வேதனை மீறுதே
பாதகம் நேர்ந்ததோ மாதவன் அவர் இங்கு (எப்போ)
கண்டேன் கண்டேன் கண்டேன்
என் சுந்தரன் அவர் வரக் கண்டேன்
கனவிலும் நினைவிலும் பூஜிக்கும் தெய்வம்
கண்ணன் என் மணிவண்ணன்
அமுதமழை பொழியும் அரவிந்த முகந்தனைக் (கண்டேன்)
வெள்ளை உள்ளம் படைத்த கோபாலன் தன்னை
கொள்ள நினைக்கும் கம்ச பூபாலன்
மெல்லத் தொடர்ந்து வரும் சிசுபாலன் தன்னை
உள்ளமும் எண்ணி எண்ணிக் கலங்குதடி
மாயரூபா மணிவண்ணா – உன்னை
மடக்கவராரு ஒரு அண்ணா
பாயும் புலி எனவே
தாவி வராரு பாரு உஷாரு....
இதயம் கவர்ந்த உன்னை இழந்தால் – உலகம்
இருண்டு போகுமே நந்தலாலா
என்னுடன் நீ இருக்கும்போது எங்கும்
இன்ப ஒளி வீசும் நந்தலாலா
யார்க்கும் அகப்படாத கள்வன் – என்
அந்தரங்கம் புகுந்த செல்வன்
காக்கப் பிறந்தவனும் அவனே – நான்
காத்திட நினைப்பதும் அவனே......