உந்தன் ஜாலம் செல்லாது கண்ணா
நான் தரமாட்டேன் தர மாட்டேன்
உனதாசை முரளி இதை தர மாட்டேன்
முரளி தனையே நந்தனா.....(உந்தன்)
பாயும் யமுனை நதியோரம் வேணுகானம்
பாய்ந்தோடி கோபியரை அழைக்காது திண்ணமே
ஊதும் குழலோசையிலே உலகாளும் சீலனே
உந்தன் இந்திர ஜாலம் இனி செல்லுமோ கோபாலனே
உன் மகிமை எங்கே மணிவண்ணா....
வண்ணக் குழலை எட்டி நின்று காட்டி
ஆசை மூட்டுவேன்
கண்ணிலொற்றி அன்போடு
கட்டித் தழுவிக் கொள்வேன்
மாயனே என் காதல் எல்லாம்
மதுர முரளி மீதிலே
வேய்ங்குழலை முத்தமிட்டு
ஏங்கச் செய்வேன் உன்னையே
என்னை கெஞ்சிப் பயனில்லை ரமணா....(உந்தன்)