உன்னை நினைச்சாலே
உன்னை நினைச்சாலே
கிளு கிளுக்குது மச்சானே
நெஞ்சு மச்சானே ஆசை மச்சானே...
ரகசியமா உன்னைக் கண்டு பேச ஓடிவந்தேனே (உன்னை)
நஞ்சைப் பாத்திக் கட்டி நாத்து நடும் நாளிலே
என்னைப் பாத்துப் பாத்து நீயும் சிரிச்ச போதிலே
மனம் பறிப்போச்சுதோ உந்தன் நெனவாச்சுதே
மழை காணாத பயிரானேன் மச்சானே.....(ரகசியமா)
சங்கிலிக் கருப்பண்ணசாமி கோயில் ஓரத்திலே
யாரும் அறியாம சாயங்கால நேரத்திலே
வந்து காத்திருக்கேன் வழி பாத்திருக்கேன்
பெண் பாவம் மிக பொல்லாதது மச்சானே (ரகசியமா)
என்னைப் பெத்தவங்க மத்தவங்க பந்தமே
உனக்கப்புறந்தான் எண்ணி வந்தேன் சொந்தமே
வச்ச மல்லிகையும் வச்ச மல்லிகைப்பூ வாடிப்போச்சே
பாழும் நட்சத்திரம் கேலி பண்ணி சிமுட்டுதே
எனது மனம் ஆசை மச்சான் உன்னை நாடி ஏங்குதே (உன்னை)
ஆசை மச்சான் நேச மச்சான்
ஓ.....ஓ...ஆசை மச்சான் நேச மச்சான்......(ஆசை)