பாரினில் ஆதியில் பேதமே இல்லை
பாதியில் வந்ததே தொல்லை
ஏருழுவோன் பேருக்கே பூமி என்று
எழுதிடுவோம் சாசனமே சாசனமே.....
சில பேர் வாழ பல பேர் உழைக்கும்
நிலைமையும் சரிதானோ
மனித நீதி இதுதானோ
நாட்டில் நீதி இதுதானோ – இந்த
நிலைமையும் சரிதானோ....
கண்ணீர் சிந்தும் பாட்டாளி ரத்தம்
பன்னீராவது முறையோ
ஏழையின் நீதி இதுதானோ
காலம் மாறின போதிலும் ஏழை
கண்ணீர் மாறிட வகையிலையோ
கேளீர் நீதி இதுதானோ.......(நாட்டில்)
வானிலே பறவைகள் இனமே
உரிமையாகவே பறந்திடும் அழகினைப் பார்
மீனினம் நீந்திடும் சுதந்திரம் பார்
அடிமை நிலையில் மனிதனைப் பார்
ஏழையின் வாழ்வே செல்வரின் கையில்
இனித்திடும் தின்பண்டமாச்சு........(ஏழையின்)
உலகிலே இல்லாதவன் என்னும் சொல்லை
ஏட்டினில் இருந்தே எடுத்திடுவோம்
எல்லோரும் சமமே நாட்டில் யாவுமே
பொதுச் செல்வம் என்றிடுவோம்
எளியோன் துயரை வலியோன் உணரா
இழிநிலை உலகினில் ஏனோ.......(ஏழையின்)