Skip to content

Popular

Sharreth

Artist profile

SharrethTamil Music Director – Song Lyrics & Movies

சரத்

About Sharreth

பிறப்பு · Born
3 Oct 1969, Kollam

தொழில் ரீதியாக சரத் (Sharreth) என்று அறியப்படும் சுஜித் வாசுதேவன் (Sujith Vasudevan I , பிறப்பு: 3 அக்டோபர் 1969) என்பவர் ஒரு இந்திய இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவர் முதன்மையாக மலையாளப் படங்களுக்கு இசையமத்திருந்தாலும், தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படத் துறைகளிலும் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் படிக்க ›

இவர் 2008 ஆம் ஆண்டில் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இவன் மேகரூபன் திரைப்படத்திற்காக 2011ஆம் ஆண்டில் சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசு திரைப்பட விருதைப் பெற்றார். மேகதீர்த்தம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாவயாமி என்ற பாடலுக்காக, சிறந்த கருநாடக இசைப் பாடகருக்கான கேரள அரசு திரைப்பட விருதைப் பெற்ற முதல் கலைஞர் இவர் ஆவார். இவர் பிரபல இசையமைப்பாளர் கண்ணூர் ராஜனின் மருமகன் ஆவார்.

கேரளத்தின் கொல்லத்தில் வாசுதேவன் ஆச்சாரி, இந்திராதேவி இணையருக்கு பிறந்த சரத், கருநாடக இசை மேதை எம். பாலமுரளிகிருஷ்ணாவின் சீடர் ஆவார். 1990 ஆம் ஆண்டு வெளியான க்ஷனக்கத்து என்ற மலையாளத் திரைப்படம் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பு, சரத் திரைப்படங்களில் அவ்வப்போது பின்னணி பாடகராக இருந்துள்ளார். மலையாள திரைப்படமான ஒன்னிங்கு வன்னெங்கில் (1985) என்ற மலையாளத் திரைப்படத்திற்காக கே. எஸ். சித்திராவுடன் இணைந்து பாடிய டூயட் 'டம் டம் டும்' என்ற பாடலே இவரது முதல் பாடலாகும்.

சரத் 1999 மார்ச் 19 அன்று கண்ணூர் ராஜனின் மகள் சீதா ராஜனை மணந்தார். இவர்களுக்கு 2006 இல் பிறந்த தியா என்ற மகள் உள்ளார்.

ஏசியாநெட் தொலைக்காட்சியின் ஐடியா ஸ்டார் சிங்கர் நிகழ்சியின் ஐந்தாவது பருவத்தின் முடிவு வரை இவர் அதன் நிரந்தர நடுவர்களில் ஒருவராக இருந்தார். 2011 செப்டம்பர் 26 முதல் அம்ருதா தொலைக்காட்சியின் இசை சார்ந்த உண்மைநிலை திகழ்சியான சூப்பர் ஸ்டார்-தி அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் பி. ஜெயச்சந்திரனுடன் இணைந்து நடுவராகப் பணியாற்றினார். 2012 மே முதல், கைராளி தொலைக்காட்சியின் காந்தாரவ சங்கீதம் நிகழ்சியில் ஔசேப்பச்சன், எஸ். பி. ஷைலஜா ஆகியோருடன் இணைந்து நடுவராக பணியாற்றினார். 2013 பிப்ரவரி முதல், கே. எஸ். சித்ரா, ஸ்ரீநிவாஸ் மற்றும் சுஜாதா ஆகியோருடன் இணைந்து மழவில் மனோரமா இசை உண்மைநிலை நிகழ்சியான இந்தியன் வாய்ஸ் (பருவம் 2) மற்றும் இந்தியன் வாயிஸ் ஜூனியர் ஆகியவற்றில் நடுவராக இருந்தார். சஞ்சீவ் பிள்ளை எழுதிய இவரது வரலாற்று நூலான ஆத்மராகம் என்ற நூல் லிட்மஸ் பப்ளிகேஷன்ஸ் (டிசி புக்ஸ் இன் ஒரு பிரிவு) 2014 இல் வெளியிடப்பட்டது. தற்போது, 2020 முதல் ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்சியில் சித்ரா, ஜி. வேணுகோபால், ஸ்டீபன் தேவசி , மஞ்சரி ஆகியோருடன் இணைந்து நிரந்தர நடுவர்களில் ஒருவராகப் பணியாற்றி வருகிறார்.

Sujith Vasudevan I (born 3 October 1969), professionally credited as Sharreth, is an Indian music director and singer. He predominantly composes film scores and songs for Malayalam films, but has also composed many songs for the Tamil, Telugu and Hindi film industries too.

Read full biography ›

He won the Filmfare Award for the best music director in 2008. He won the Kerala State Film Award for Best Music Director in 2011 for the film Ivan Megharoopan. He was also the first recipient of the Kerala State Film Award for Best Classical Music Singer for his song Bhavayami in the film Meghatheertham. He is the son-in-law of famous music director Kannur Rajan.

Born to Vasudevan Achari and Indiradevi in Kollam, Kerala, India, Sharreth is a protégé of carnatic music virtuoso M. Balamuralikrishna. He made his debut as a film composer in the 1990 Malayalam language film Kshanakkathu. Prior to debuting as a composer, Sharreth had a sporadic presence as a playback singer for films. His first song was 'Dum dum dum', a duet with K. S. Chithra for the Malayalam film Onningu Vannengil (1985).

Sharreth is married, since 19 March 1999, to Seetha Rajan, daughter of Kannur Rajan. They have a daughter, Diya, born in 2006.

He was one of the permanent judges of Idea Star Singer on Asianet till the end of the fifth season. From 26 September 2011, he has become a judge along with P. Jayachandran on the Amrita TV musical reality show Super Star – the Ultimate. From May 2012, he has become a judge along with Ouseppachan and S. P. Shylaja on the Kairali TV's Gandharava Sangeetham. From February 2013, he was a judge along with K. S. Chithra, Srinivas and Sujatha on the Mazhavil Manorama's singing reality show Indian Voice (season 2) and Indian Voice Junior. His memoir written by Sanjeev Pillai titled Aathmaraagam was published by Litmus Publications (an imprint of DC Books) in 2014. At present, he is one of the permanent judges of Star Singer hosted by Asianet from 2020, along with K .S Chithra, G. Venugopal, Stephen Devassy and Manjari.

In 2024, K. S. Chithra headlined the Chithra Varnam concert on May 11th at the Chabot Performing Arts Center, Hayward, California. Organized by Kalalaya sponsored by Nambiar Builders, the event featured her signature melodies across multiple Indian languages, with support from musicians such as Sharreth and K. K. Nishad. The concert celebrated Mother's Day, adding a sentimental note to the evening.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Sharreth · Music Composer songs · 8

Sharreth Movies List · திரைப்படங்கள் · 6

  1. Thamizh Padam 2.0 2018 ♪ 6

    Thamizh Padam 2.0

    தமிழ் படம் 2.0

  2. Tharai Thappattai 2016 ♪ 5

    Tharai Thappattai

    தாரை தப்பட்டை

  3. Kathai Thiraikathai Vasanam Iyakkam 2014 ♪ 4

    Kathai Thiraikathai Vasanam Iyakkam

    கதை திரைக்கதை வசனம் இயக்கம்

  4. 180 2011 ♪ 2

    180

    180

  5. June R 2006 ♪ 5

    June R

    ஜூன் ஆர்

  6. Magic Magic 3D 2003

    Magic Magic 3D

Worked with Sharreth