thanga sela
தங்க சில
சிவாஜி ராவ் கெயிக்வாட் (பிறப்பு: திசம்பர் 12, 1950; Shivaji Rao Gaekwad; மராட்டி: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாஜிராவ் காயகவாடு) என்பவர் இரசினிகாந்து (RajiniKanth) என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார். இந்தப் படம் உட்பட இவரின் தொடக்ககாலத்தில் எதிராளிக் கதாப்பத்திரங்களில் நடித்தார். இவருடைய நேயர்கள் (இரசிகர்கள்) இவரைத் தலைவர் என்றும் "சூப்பர் ஸ்டார்" என்றும் அழைக்கின்றனர்.
2007 ஆம் ஆண்டில் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்திற்காக 26 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார். இதன்மூலம் ஆசியாவிலேயே நடிகர் சாக்கி சான்-னுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் ஆனார்.
இரஜினிகாந்து ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். அதில் நான்கு முறை சிறந்த நடிகருக்கான விருதும், இரண்டுமுறை சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதினையும் பெற்றுள்ளார்.சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். நடிப்பது மட்டுமின்றி சில திரைப்படங்களில் தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். நடிகராக மட்டுமின்றி ஆன்மீகவாதியாகவும், திராவிட அரசியல்களில் ஆளுமையாகவும் இருந்துவருகிறார்.
2004 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருதும், 2016 ஆம் ஆண்டு கலைகளில் இவரின் பங்களிப்பை பாராட்டும் விதத்தில் இவருக்கு நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் இரண்டாவதான பத்ம விபூசண் விருதும் வழங்கி கௌரவப்படுத்தியது. இந்தியத் திரைப்படத்துறையின் சிறந்த ஆளுமைக்கான விருது 45 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது.
2019-ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த நடிகருக்கான தாதாசாகெப் பால்கே விருது இரசினிகாந்திற்கு வழங்கப்படுவதாக 1 ஏப்ரல் 2021 அன்று அறிவிக்கப்பட்டது.
இரஜினிகாந்து திசம்பர் 12, 1950 ஆம் ஆண்டு பெங்களூர், மைசூர் (தற்போது கருநாடகம்) இந்தியாவில் பிறந்தார். ராமோசி ராவ் காயக்வாடுக்கும் (கிருட்டிணகிரி அருகே உள்ள நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்), ரமாபாய்க்கும் (கோவை எல்லையில் பிறந்தவர்) நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் மராத்தியர் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். இவரின் தந்தை காவலராகப் பணிபுரிந்தவர்.தாய் குடும்பத் தலைவியாக இருந்தார். இவரின் இயற்பெயர் சிவாஜி இராவ் கைக்வாடு ஆகும். மராட்டியப் பேரரசர் சிவாஜியின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது. வீட்டில் மராத்திய மொழியும் வெளியில் கன்னடமும் பேசி வளர்ந்தார். இரசினிகாந்தின் முன்னோர்கள் மகாராட்டிரம் மாநிலம் புனே மாவட்டத்திலுள்ள மாவதி கடெபதாரிலும் தமிழ்நாடு, கிருட்டிணகிரி மாவட்டத்திலுள்ள நொச்சிக்குப்பத்திலும் வாழ்ந்தனர். இவருக்கு சத்ய நாராயண ராவ், நாகேசுவர ராவ் எனும் இரு அண்ணன்களும், அசுவத் பாலுபாய் எனும் அக்காவும் உள்ளனர். 1956 ஆம் ஆண்டில் தனது தந்தையின் பணிநிறைவிற்குப் பின் இவரது குடும்பம் பெங்களூர் சென்று அனுமானந்தா நகரில் வீடு கட்டி குடியேறினர். ஒண்பது வயதாக இருக்கும் போது தனது தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட இரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.
ஆரம்பகாலத்தில் சிவாஜி அலுவலக உதவியாளராகவும், தச்சராகவும் வேலை பார்த்தார். ஓர் இடத்தில் மூட்டை தூக்கும் வேலை பார்த்தார். இதற்கு சம்பளமாக ஒரு மூட்டைக்கு 10 பைசா கொடுக்கப்பட்டது. பின்னர் பெங்களூர் போக்குவரத்து சேவைத் தேர்வு எழுதி நடத்துனருக்கான உரிமம் பெற்றார். 19 மார்ச் 1970 அன்று ஓட்டுநர் ராச பகதூருடன் பணியில் சேர்ந்தார். இவர்களது பணி நேரம் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆகும். பணி முடிந்த பிறகு மாலையில் அனுமந்த நகரில் இராச பகதூர் வீட்டிற்கு சிவாஜி செல்வார். பெங்களூர் போக்குவரத்து சேவையால் நடத்தப்படும் நாடகங்களுக்கு இருவரும் ஒத்திகை பார்ப்பர். ஒத்திகை சாம்ராசபேட்டை காவல் நிலையத்திற்கு அடுத்துள்ள மண்டபத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 வரை நடக்கும். எப்போதும் திரைப்படங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பர். ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் பார்ப்பர். சிவாஜிக்கு சிவாஜி கணேசன், இராச்சுகுமார் மற்றும் எம்.சி.ஆர். நடித்த படங்கள் பிடிக்கும். அப்படக் காட்சிகளில் அவர்களைப் போல் சிவாஜி நடித்துக் காண்பிப்பார். அப்போது 25க்கும் மேற்பட்ட நாடகங்களில் சிவாஜி நடித்து இருந்தார். அப்போது இவருடன் இருந்த நண்பர்கள், நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இவர் ஏன் திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என்று கூறினர். சிவாஜிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் யாரிடமும் உதவி கேட்பதையும் விரும்பியதில்லை. அவர் உருவத்தில் அழகானவரும் கிடையாது. அவருக்குப் பின்புலமும் எதுவும் கிடையாது. நான் நடத்துனர் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று கேட்டால் யாராவது வாய்ப்புக் கொடுப்பார்களா என்ற எண்ணம் மனதில் ஓடியது. பகதூரும் சிவாஜியின் மற்ற நண்பர்களும் அந்நேரத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேருமாறு அவரை அறிவுறுத்தினர். ஒருவேளை திரைப்படத்துறையில் சேர முடியாவிட்டால் தனக்குப் பாதுகாப்பாக இருக்கும் அரசாங்க நடத்துனர் பணியை விடுவதற்கு சிவாஜிக்கு விருப்பம் இல்லை. எனவே பணியிலிருந்து சாதாரண விடுப்பும் பின்னர் அங்கீகரிக்கப்படாத விடுப்பும் எடுத்தார். கே. பாலசந்தர் தன்னுடைய மேசர் சந்திரகாந்த் படத்தில் ஏ.வி.எம். இராசனின் கதாபாத்திரப் பெயரான இரசினிகாந்தை இவருக்குச் சூட்டினார். இப்பெயருக்கு 'இரவின் நிறம்' என்று பொருள்.
16 பெப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். ஐசுவர்யா, சௌந்தர்யா இரஜினிகாந்து ஆகியோர் இரு மகள்கள் ஆவார். இவருடைய மூத்த மகள் ஐசுவர்யா, 2004 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்பட நடிகரான தனுசை மணந்தார். செப்டம்பர் மூன்றாம் தேதி 2010 ஆம் ஆண்டு அன்று சௌந்தர்யா, அசுவின் ராம்குமார் என்ற தொழிலதிபரை மணந்தார். தற்பொழுது இவர்களுக்கு இடையே மணமுறிவு ஏற்பட்டது.
இரஜினிகாந்து ஆன்மீகத்தைப் பின்பற்றுபவர். இவர் தியானமும் செய்யக்கூடியவர். இவர் எப்போதாவது இமயமலைக்கு யாத்திரை செல்கிறார். இவர் இராமகிருட்டிண பரமகம்சா, சுவாமி சச்சிதானந்தா, இராகவேந்திரா சுவாமி, மகாவதார் பாபாஜி, மற்றும் இரமண மகரிசி ஆகியோரை தன் விருப்பமான ஆன்மீகத் தலைவர்கள் எனக் குறிப்பிடுகிறார்.
Shivaji Rao Gaikwad (born 12 December 1950), known professionally as Rajinikanth, is an Indian actor who predominantly works in Tamil cinema. In a career spanning over five decades, he has appeared in 170 films, including films in Tamil, Hindi, Telugu, Kannada, Bengali, and Malayalam. He is widely regarded as one of the most successful and popular actors in the history of Indian cinema. The Government of India honoured him with the Padma Bhushan in 2000 and the Padma Vibhushan in 2016, India's third- and second-highest civilian honours, respectively, the Dadasaheb Phalke Award in 2019, the highest Indian award in the field of cinema, and the IFFI Satyajit Ray Lifetime Achievement Award for his contributions to world cinema.
Following his debut in K. Balachander's 1975 Tamil drama Apoorva Raagangal, Rajinikanth's acting career commenced with a brief phase of portraying antagonistic characters in Tamil films. His major positive role as a scorned lover in S. P. Muthuraman's Bhuvana Oru Kelvi Kuri (1977), together with his roles in 1978's Mullum Malarum and Aval Appadithan, earned him critical acclaim; the former earned him a Tamil Nadu State Film Award Special Prize for Best Actor. By the end of the decade, he had worked in all South Indian film industries and established a career in Tamil cinema. He then played dual roles in the action thriller Billa (1980), a remake of the Hindi film Don (1978). It was his biggest commercial success to that point, earning him stardom and giving him an action hero image. He starred in a triple role in Moondru Mugam (1982), which earned him a special prize at the Tamil Nadu State Film Awards ceremony. The following year, he made his Hindi film debut with T. Rama Rao's top-grossing Andhaa Kaanoon (1983). Nallavanukku Nallavan (1984) won him that year's Filmfare Award for Best Tamil Actor. In the latter half of the 1980s, he starred in several successful films in Tamil and Hindi, including Geraftaar (1985), Padikkadavan (1985), Mr. Bharath (1986), Velaikaran (1987), Manithan (1987), Dharmathin Thalaivan (1988), Mappillai (1989) and ChaalBaaz (1989).
In 1991, Mani Ratnam's Tamil crime film Thalapathi earned Rajinikanth major critical acclaim for his performance. He collaborated with Suresh Krissna for many films including Annaamalai (1992) and Baashha (1995); the latter was the biggest commercial success in his career yet as well as the highest-grossing film in Tamil for many years. His other successes include P. Vasu's Mannan (1992), Uzhaippali (1993) and K. S. Ravikumar's Muthu (1995) and Padayappa (1999); the latter went on to become his and Tamil cinema's highest-grossing movie, exceeding Baashha.
After a hiatus of a few years, Rajinikanth returned to acting with the comedy horror film Chandramukhi (2005); it went on to become the highest-grossing Tamil film of all time. His next film, S. Shankar's Sivaji (2007), was the third Indian film and the first-ever Tamil film to enter the 100 Crore Club. He then played dual roles as a scientist and an andro-humanoid robot in the science fiction film Enthiran (2010) and its sequel 2.0 (2018), both of which were India's most expensive productions at the time of their release. His action films 2.0 (2018), Jailer (2023), Coolie (2025), and Jailer 2 (2026) became major commercial successes in Tamil cinema, making him the only actor in the industry with four films surpassing the ₹500 crore mark. His latest movie, Jailer 2 (2026), shattered box office records by crossing 700 crores worldwide, topping 2.0 (2018) to become the highest-grossing Tamil film of all time. This also marks his second film to cross the 700-crore mark.
Known for his unique mannerisms and one-liners in films, he has a huge fan base and a cult following. He has won numerous film awards, including the National Film Award, eight Tamil Nadu State Film Awards, a Nandi Award, a Filmfare Award and two Maharashtra State Film Awards. Rajinikanth was named one of the most influential persons in South Asia by Asiaweek. He was also named by Forbes India as the most influential Indian of the year 2010.
Rajinikanth was born Shivaji Rao Gaikwad on 12 December 1950 in a Marathi family in Bangalore, Mysore State (present-day Karnataka). His mother was a homemaker, and his father, Ramoji Rao Gaekwad, was a police constable. His ancestors hailed from Mavadi Kadepathar, Pune district, Maharashtra. He is the youngest of four children in a family consisting of two elder brothers (Satyanarayana Rao and Nageshwara Rao) and a sister (Aswath Balubhai). After his father's retirement from work in 1956, the family moved to the suburb of Hanumantha Nagar in Bangalore and built a house there. He lost his mother at the age of nine.
Rajinikanth had his primary education at the Gavipuram Government Kannada Model Primary School in Bangalore. As a child, he was "studious and mischievous" with a great interest in cricket, football and basketball. During this time, his brother enrolled him at the Ramakrishna Math, a Hindu monastery set up by the Ramakrishna Mission. In the math, he was taught the Vedas, tradition and history, which eventually instilled a sense of spirituality in him. In addition to spiritual lessons, he also began acting in plays at the math. His aspiration towards theatre grew at the math, and he was once given an opportunity to enact the role of Ekalavya's friend from the Hindu epic Mahabharata. His performance in the play received praise from the Kannada poet D. R. Bendre. After sixth grade, Rajinikanth was enrolled at the Acharya Pathasala Public School and studied there until he completed his pre-university course. During his schooling at the Acharya Pathasala, he spent a lot of time acting in plays.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
2025
♪ 9
கூலி
2024
♪ 5
லால் சலாம்
2024
♪ 5
வேட்டையன்
2021
அண்ணாத்த
2020
♪ 5
தார்பார்
2019
♪ 6
பேட்ட
2018
♪ 3
2.0
2018
♪ 9
காலா
2016
♪ 6
கபாலி
2014
♪ 9
கோச்சடையான்
2010
♪ 6
எந்திரன்
2008
♪ 6
குசேலன்
2007
♪ 8
சிவாஜி
2005
♪ 7
சந்திரமுகி
2002
♪ 6
பாபா
1999
♪ 5
படையப்பா
1997
♪ 8
அருணாசலம்
1995
♪ 10
பாட்ஷா
1995
♪ 5
முத்து
1994
♪ 11
வீரா
1993
♪ 9
எஜமான்
1993
♪ 5
உழைப்பாளி
1993
♪ 5
வள்ளி
1992
♪ 6
அண்ணாமலை
1992
♪ 6
மன்னன்
1992
♪ 3
பாண்டியன்
1991
♪ 6
தர்மதுரை
1991
நாட்டுக்கு ஒரு நல்லவன்
1991
♪ 7
தளபதி
1990
அதிசயப் பிறவி
1990
♪ 6
பணக்காரன்
1989
♪ 5
மாப்பிள்ளை (1989 film)
1989
♪ 7
ராஜா சின்ன ரோஜா
1989
♪ 8
ராஜாதி ராஜா
1989
♪ 4
சிவா
1988
♪ 5
தர்மத்தின் தலைவன்
1988
♪ 4
குரு சிஷ்யன்
1988
♪ 6
கொடி பறக்குது
1987
♪ 6
மனிதன்
1987
ஊர்க்காவலன்
1987
♪ 6
வேலைக்காரன்
1986
♪ 7
மாவீரன்
1986
♪ 5
மிஸ்டர் பாரத்
1986
♪ 6
நான் அடிமை இல்லை
1986
♪ 5
விடுதலை
1985
♪ 5
நான் சிகப்பு மனிதன் (1985 Film)
1985
♪ 5
படிக்காதவன் (1985 Film)
1985
♪ 7
ஸ்ரீ ராகவேந்திரா
1985
♪ 6
உன் கண்ணில் நீர் வழிந்தால்
1984
♪ 5
அன்புள்ள ரஜனிக்காந்
1984
♪ 3
கை கொடுக்கும் கை
1984
♪ 2
நான் மகான் அல்ல
1984
♪ 7
நல்லவனுக்கு நல்லவன்
1984
♪ 5
தம்பிக்கு எந்த ஊரு
1983
♪ 6
அடுத்த வாரிசு
1983
♪ 4
பாயும் புலி
1983
♪ 4
சிவப்பு சூரியன்
1983
♪ 5
தாய் வீடு
1983
♪ 5
தங்க மகன் (1983 film)
1983
♪ 6
துடிக்கும் கரங்கள்
1982
♪ 4
எங்கேயோ கேட்ட குரல்
1982
♪ 5
மூன்று முகம்
1982
♪ 3
போக்கிரி ராஜா (1982 film)
1982
புதுக்கவிதை
1982
ரங்கா
1982
♪ 6
தனிக்காட்டு ராஜா
1981
கர்ஜனை
1981
கழுகு
1981
♪ 4
நெற்றிக்கண்
1981
♪ 3
ராணுவ வீரன்
1981
♪ 3
தீ
1981
♪ 4
தில்லு முள்ளு
1980
♪ 5
அன்புக்கு நான் அடிமை
1980
♪ 5
பில்லா
1980
♪ 2
எல்லாம் உன் கைராசி
1980
♪ 5
ஜானி
1980
♪ 4
காலி (1980 Film)
1980
♪ 4
முரட்டு காலை
1980
♪ 5
நான் போட்ட சவால்
1980
♪ 4
பொல்லாதவன் (1980 Film)
1979
♪ 3
ஆறிலிருந்து அறுபது வரை
1979
அலாவுதீனும் அற்புத விளக்கும்
1979
♪ 3
அன்னை ஒரு ஆலயம்
1979
♪ 3
தர்ம யுத்தம்
1979
குப்பத்து ராஜா
1979
♪ 6
நான் வாழவைப்பேன்
1979
நினைத்தாலே இனிக்கும்
1978
ஆயிரம் ஜென்மங்கள்
1978
♪ 3
அவள் அப்படித்தான்
1978
♪ 4
பைரவி
1978
என் கேள்விக்கு என்ன பதில்
1978
♪ 5
இளமை ஊஞ்சல் ஆடுகிறது
1978
♪ 3
இறைவன் கொடுத்த வரம்
1978
♪ 4
ஜஸ்டிஸ் கோபிநாத்
1978
♪ 5
மாங்குடி மைனர்
1978
♪ 4
முள்ளும் மலரும்
1978
♪ 5
பிரியா
1978
♪ 3
சதுரங்கம்
1978
♪ 3
சங்கர் சலீம் சைமன்
1978
♪ 4
தாய் மீது சத்தியம்
1978
தப்புத் தாளங்கள்
1978
♪ 4
வணக்கத்திற்குரிய காதலியே
1977
♪ 5
16 வயதினிலே
1977
♪ 4
ஆடு புலி ஆட்டம்
1977
♪ 4
ஆறு புஷ்பங்கள்
1977
♪ 7
அவர்கள்
1977
♪ 3
புவனா ஒரு கேள்விக்குறி
1977
♪ 4
காயத்ரி
1977
ரகுபதி ராகவன் ராஜாராம்
1976
♪ 3
மூன்று முடிச்சு