Skip to content

Popular

திருக்குறள் - குறள் 1201

குறள் பால்:
காமத்துப்பால்
குறள் இயல்:
கற்பியல்
குறள் 1201
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.
— திருவள்ளுவர் · நினைந்தவர்புலம்பல்
WhatsApp

திருக்குறள் - குறள் 1201 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.

மு.வரதராசனார் உரை

நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.

சாலமன் பாப்பையா உரை

முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.

பரிமேலழகர் உரை

[அஃதாவது , முன் கூடிய ஞான்றே இன்பத்தினை நினைந்து தலைமகள் தனிமை எய்தலும், பாசறைக்கண் தலைமகன் தனிமை எய்தலுமாம் . இவ்வாறு இருவர்க்கும் பொதுவாதல் பற்றிப் பன்மைப்பாலாற் கூறப்பட்டது. இது படர் மிகுதி தன்கண்ணதாக நினைந்த தலைமகட்கும் உரித்தாகலின் அவ்வியைபுபற்றித் த

மணக்குடவர் உரை

தம்மாற் காதலிக்கப்பட்டவரை நினைத்தாலும் அது நீங்காத பெருங்களிப்பைத் தரும்: ஆதலால் கள்ளினும் காமம் இனிது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

பிரிந்திருக்கும்போது முன்பு கூடிய இன்பத்தினை நினைத்தாலும் அது அப்போது பெற்றதுபோல இருக்கின்றது. ஆதலால் நினைத்தாலும் மகிழ்ச்சியைத் தரும் காமம், உண்டால் அல்லாமல் மகிழ்ச்சி செய்யாத கள்ளினை விட இன்பம் கொடுப்பதாகும்.

Translation

From thought of her unfailing gladness springs,
Sweeter than palm-rice wine the joy love brings.

Explanation

Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.

திருக்குறள் - குறள் 1201
திருக்குறள் ஓவியம் - குறள் 1201
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 121: நினைந்தவர்புலம்பல்