அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
Thirukural · குறள் பால் 1
திருக்குறள் - குறள் பால் அறத்துப்பால்
Showing 1 - 10 of 380
குறள் 1 குறள் 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
குறள் 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.
குறள் 4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
குறள் 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
குறள் 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.
குறள் 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
குறள் 8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.
குறள் 9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
குறள் 10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.