திருக்குறள் - குறள் 1203

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: நினைந்தவர்புலம்பல்.


திருக்குறள் - குறள் 1203


நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ?.

மு.வரதராசனார் உரை:
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?.

சாலமன் பாப்பையா உரை:
எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?.

பரிமேலழகர் உரை:
(தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) தும்மல் சினைப்பது போன்று கெடும் - எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது; நினைப்பவர் போன்று நினையார்கொல் - அதனால் காதலர் என்னை நினைப்பார் போன்று நினையாராகல் வேண்டும். (சினைத்தல்: அ


மணக்குடவர் உரை:
அவர் நம்மை நினைப்பவர்போன்று நினையார் கொல்லோ: தும்மல் தோன்றுவதுபோன்று கெடாநின்றது. தலைமகள் உலகத்துப் பெண்டிராயுள்ளார் கூறுவதொன்றை ஈண்டுக் கூறினாள்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எனக்குத் தும்மலானது வருவது போலிருந்து வராமல் போகின்றது. அதனால் காதலர் என்னை நினைப்பார்போல இருந்து நினைக்க மாட்டாரோ?.

Translation:
A fit of sneezing threatened, but it passed away;
He seemed to think of me, but do his fancies stray?.

Explanation:
I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்