Skip to content

Popular

திருக்குறள் - குறள் 1207

குறள் பால்:
காமத்துப்பால்
குறள் இயல்:
கற்பியல்
குறள் 1207
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.
— திருவள்ளுவர் · நினைந்தவர்புலம்பல்
WhatsApp

திருக்குறள் - குறள் 1207 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பிணைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?.

மு.வரதராசனார் உரை

( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?.

சாலமன் பாப்பையா உரை

அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?.

பரிமேலழகர் உரை

(இதுவும் அது.) மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் - அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று உள்ளாநிற்கவும் பிரிவு என் உள்ளத்தைச் சுடாநின்றது; மறப்பின் எவனாவன் - அங்ஙனம் பிரிவாற்றாத யான் மறந்தால் இறந்து படாது உளேனாவது எத்தால்? (மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்

மணக்குடவர் உரை

அவரை மறந்தால் என்னாவன் கொல்லோ: மறப்பறியேனாய் நினைக்கவும் இக்காமம் நெஞ்சத்தைச் சுடாநின்றது. இது சீரியன உள்ளிப் பூரியன மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

முன்பு நுகர்ந்த இன்பத்தினை மறக்காமல் நினைத்துக் கொண்டிருந்தாலும் பிரிவுத் துன்பம் எனது உள்ளத்தினைச் சுட்டு விடுகின்றது; அவ்வாறு இருக்க, அதனை மறந்தால் எவ்வாறு உயிர்வாழ்வேன்?.

Translation

If I remembered not what were I then? And yet,
The fiery smart of what my spirit knows not to forget!.

Explanation

I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?.

திருக்குறள் - குறள் 1207
திருக்குறள் ஓவியம் - குறள் 1207
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 121: நினைந்தவர்புலம்பல்