Skip to content

Popular

திருக்குறள் - குறள் 1204

குறள் பால்:
காமத்துப்பால்
குறள் இயல்:
கற்பியல்
குறள் 1204
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.
— திருவள்ளுவர் · நினைந்தவர்புலம்பல்
WhatsApp

திருக்குறள் - குறள் 1204 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?.

மு.வரதராசனார் உரை

எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?.

சாலமன் பாப்பையா உரை

என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?.

பரிமேலழகர் உரை

(இதுவும் அது.) எம் நெஞ்சத்து அவர் ஓ உளரே - எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழும் உளரேயாய் இராநின்றார்; அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல் - அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாமும் உளமாதுமோ, ஆகேமோ? (ஓகார இடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்தி நின்றது. 'உளமாயும், வினை முட

மணக்குடவர் உரை

அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல்லோ: எம்முடைய நெஞ்சின்கண் எப்பொழுதும் அவர் உளராகா நின்றார். ஓஒ என்பது மிகுதிப்பொருளின்கண் வந்ததாதலான், எப்பொழுதும் என்னும் பொருளதாயிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

எம்முடைய நெஞ்சத்தில் காதலர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றார். அதுபோலவே அவருடைய நெஞ்சத்தில் நாமும் இருந்துகொண்டு இருக்கிறோமோ?.

Translation

Have I a place within his heart!
From mine, alas! he never doth depart.

Explanation

He continues to abide in my soul, do I likewise abide in his ?.

திருக்குறள் - குறள் 1204
திருக்குறள் ஓவியம் - குறள் 1204
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 121: நினைந்தவர்புலம்பல்