திருக்குறள் - குறள் 1209
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: நினைந்தவர்புலம்பல்.
திருக்குறள் - குறள் 1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர். எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
மு.வரதராசனார் உரை:
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.
பரிமேலழகர் உரை:
(தலைமகன் தூது வரக் காணாது வருந்துகின்றாள், வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது) வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து - முன்பெல்லாம் நாம் இருவரும் வேறல்லம் என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து: என் இன்னுயிர் விளியும்-எனது இனிய உயிர் கழியாநி
மணக்குடவர் உரை:
நம்முள் நாம் வேறல்லமென்று சொன்னவர் அருளின்மையை மிகவும் நினைந்து எனது உயிர் அழியா நின்றது. இது தலைமகன் நினையானென்று தெரிந்து தலைமகள் தோழிக்குக் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
'நாம் இருவரும் வேறல்ல' என்று சொன்ன காதலருடைய அன்பில்லாத தன்மையினை நினைத்து எனது இனிய உயிர் கழிந்து சென்று கொண்டிருக்கின்றது.
Translation:
Dear life departs, when his ungracious deeds I ponder o'er,
Who said erewhile, 'We're one for evermore'.
Explanation:
My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்